வாய தொறந்தா பாலாபிஷேகம், தோரணம் கட்ட ஆள் இருக்காது.. கமல், எம்ஜிஆர் வளர்த்ததை சீரழிக்கும் விஜய்

Kamal Vs Vijay: நள்ளிரவு 12 மணிக்கு பஸ்ட் லுக் போஸ்டர் விடுவது.மிட் நைட் காட்சிகள் நடத்த வைப்பது. அதிகாலை காட்சிகளை தியேட்டரில் திரையிடுவதற்கு போர் கொடி பிடிப்பது போன்றவற்றை தடுக்க வேண்டும், மாறாக இந்த நடிகர்கள் அதை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவது இந்த சமுதாயத்தினரை சீரழிக்கிறது.

நடிகர்கள் வாயைத் திறந்தால் படம் ரிலீஸ் ஆகும் போது கட்டவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது தோரணம் கட்டுவது போன்றவற்றை செய்வதற்கு ஆள் இருக்காது என்பதை அறிந்து, அவர்கள் எதுவுமே சொல்லாமல் நமக்கு ஏன் வம்பு, நம் படம் நன்றாக ஓடி கல்லா கட்டினால் மட்டும் போதும் என்ற எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கிறது.

Also read: பெரிய தப்புன்னு அர்ஜுனே வெறுத்த லியோ.. 20 வருஷத்துக்கு முன்னாடி ஹரால்டு தாஸ் எடுத்த சபதம்

நல்ல கருத்துக்களை சொல்லி ரசிகர்களையும் வருங்கால சங்கதியினரையும் நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் யாரும் இப்பொழுது படம் எடுப்பது இல்லை. படத்தில் அருவருப்பான வார்த்தைகளை பேசுவதும், ரத்தம் தெறிக்க சண்டை போடுவதும் தான் இப்பொழுது இவர்களின் ட்ரெண்ட் என்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான லியோ டீசரில் குடும்பத்துடன் பார்க்காதவாறு மிக அருவருப்பாக கெட்ட வார்த்தை பேசுகிறார் விஜய். அது மட்டும் இன்றி ட்ரைலர் முழுக்க முழுக்க இரத்த களறியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த ட்ரெய்லரை திரையிட்ட ரோகினி தியேட்டர் விஜய் ரசிகர்களால் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு கருத்தும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை இளைய தளபதி விஜய்.

Also read: இதுக்கு மேலயும் வாய பொத்திகிட்டு இருப்பது சரியா.? தளபதி விஜய்க்கு வலுக்கும் கண்டனங்கள்.!

ஒரு காலத்தில் எம்ஜிஆர், எப்படி ஒரு நடிகர் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தார். தன்னுடைய ரசிகர்களை தன் வீட்டு உறவினர் போல் பார்த்து அவருக்கு நல்லது-கெட்டதை சொல்லிக் கொடுத்து கண்ணியத்தோடு ஆளாக்கினார். அதை போல் தான் இப்பொழுது கமலும் தன்னுடைய ரசிகர்களை கண்ணியமாக உருவாக்கி வருகிறார்.

உலக நாயகன் பேசும் இடங்களில் எல்லாம் புத்தகத்தை படியுங்கள். படிப்பு தான் உங்களை உயர்ந்தவன் ஆக்கும். படிப்பில் உங்கள் சிந்தனையை செலுத்தி விட்டால் வேறு எந்த தவறான தீய எண்ணங்களும் தோன்றாது. ஒவ்வொரு ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அனைவரையும் படிக்குமாறு வலியுறுத்துகிறார். ஆனால் சில நடிகர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக ரசிகர்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

Also read: மொத்தத்தையும் காலி செய்த லியோ ட்ரெய்லர்.. விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்திய 7 விஷயங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்