மொத்தத்தையும் காலி செய்த லியோ ட்ரெய்லர்.. விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்திய 7 விஷயங்கள்

Vijay-Leo: லியோ ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலை மாறி தற்போது லோகேஷ் இப்படி ஏமாத்திட்டாரே என்று புலம்பும் நிலைக்கு வந்திருக்கின்றனர். விஜய் ரசிகர்களுக்கு இது சரவெடி ட்ரீட்டாக இருந்தாலும் பல நெகட்டிவ் விமர்சனங்கள் எழுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

இது விஜய்க்கும் சில சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி லியோ மூலம் விஜய்யின் பெயர் கொஞ்சம் அல்ல நிறையவே டேமேஜ் ஆகி இருக்கிறது. அதிலும் அவர் கெட்ட வார்த்தையை சரளமாக பேசி இருப்பதை பார்க்கும்போது பக் என்று இருக்கிறது. குட்டி ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் பற்றி அவர் ஏன் யோசிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

Also read: பெரிய தப்புன்னு அர்ஜுனே வெறுத்த லியோ.. 20 வருஷத்துக்கு முன்னாடி ஹரால்டு தாஸ் எடுத்த சபதம்

அது மட்டுமல்லாமல் அரசியல் என்ட்ரி கொடுக்கும் நேரத்தில் இப்படி ஒரு சர்ச்சை அவர் ஒரு நல்ல தலைவனாக இருக்க தகுதியில்லை என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதே போன்று ரோகிணி தியேட்டரில் ரசிகர்கள் செய்த அட்டூழியமும் பூதாகரமாக வெடித்துள்ளது.

இதனாலே இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கிடைக்காதது 100% சரிதான் என்ற பேச்சும் உலா வந்து கொண்டிருக்கிறது. அது மட்டும் நடந்திருந்தால் என்னென்ன கலவரம் வெடித்து இருக்குமோ தெரியவில்லை. அதேபோன்று படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ட்ரெய்லர் மூலம் குறைந்துவிட்டது.

Also read: உங்களிடம் கெஞ்சி பொழப்பு நடத்தனும் அவசியம் இல்ல.. ரெட் ஜெயிண்ட் உதயநிதி இல்லாமல் சாதிக்கும் லியோ

ஏனென்றால் இதைப் பார்க்கும் போதே பதட்டமும், பிபியும் வந்தது போல் இருக்கிறது. இதைவிட அதிகமாக எதிர்பார்த்து படத்திற்கு போனால் ஹார்ட் அட்டாக் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதை அடுத்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம் விஜய் லோகேஷ் இருவருக்கும் இருக்கும் பிரச்சனை பற்றி தான்.

அது பற்றி வந்த செய்தி எல்லாம் உண்மை இல்லை என தயாரிப்பு தரப்பில் கூறினாலும் ட்ரெய்லரை பார்க்கும்போது லோகேஷின் கவனமின்மை வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதுவே அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையையும் அம்பலப்படுத்தி காட்டிவிட்டது. இது எல்லாவற்றிற்கும் மேலாக ஃபேமிலி ஆடியன்ஸ் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டுமா என்று நினைக்கும் அளவுக்கு ட்ரெய்லரில் வன்முறை உச்சத்தை காட்டி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த ஏழு பிரச்சனைகள் லியோவுக்கான பின்னடைவாக இருக்கிறது.

Also read: லியோ சோலிய முடிச்சிட்டு நியாயமா பேசுறாங்களாம்.. ஆரம்பிக்கிறதுக்கு முன் விஜய்க்கு வச்ச முற்றுப்புள்ளி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்