போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாமல் திணறும் சந்திரமுகி 2, இறைவன்.. 5வது நாள் முடிவில் செய்த வசூல்

இந்த வாரம் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அதை கணக்கில் கொண்டு சந்திரமுகி 2, இறைவன் போன்ற படங்கள் மிலாடி நபி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த இரு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக தான் இருந்தது. ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஜெயம் ரவியின் இறைவன் படத்தை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக சில மோசமான காட்சிகள் இடம்பெற்று இருந்தது அனைவரையும் பதப்பதைக்க வைத்திருந்தது. மற்றொருபுறம் சந்திரமுகி 2 படம் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இருந்தது. அதாவது சந்திரமுகி படம் மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கி இருந்தது.

Also Read: சைக்கோ கில்லரை தண்டிக்க இறைவன் அவதாரம் எடுத்தாரா.? ‘A’ சர்டிபிகேட் வாங்கிய ஜெயம் ரவி பட திரை விமர்சனம்

மேலும் அந்த படத்தில் சந்திரமுகி என்ற பெயரை மட்டும் பயன்படுத்தி இருந்தாலும் மனோ தத்துவ பிரச்சனையை வைத்து தான் எடுத்திருந்தனர். அதுவே ரசிகர்களை மிரள விட்டிருந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் நிஜ சந்திரமுகி கதையை வைத்தும் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்த வில்லை. ஆனாலும் விடுமுறை நாட்களில் படத்தை பார்த்து நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக சந்திரமுகி 2 படம் ஓரளவு நல்ல வசூலை தான் பெற்றிருக்கிறது.

லைக்கா தயாரிப்பில் 80 கோடி பட்ஜெட்டில் சந்திரமுகி 2 படம் உருவாகி இருந்தது. அந்த வகையில் ஐந்தாவது நாள் முடிவில் 24.5 கோடி வசூல் செய்திருக்கிறது. மேலும் நேற்றைய தினம் மட்டும் 4.50 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனால் இறைவன் படம் இதுவரை 9 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. காரணம் ஏ சர்டிபிகேட் படம் என்பதால் குடும்பமாக இந்த படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரவில்லை.

Also Read: இறைவனை விட மூன்று மடங்கு அதிகம் வசூல் செய்த சந்திரமுகி 2.. வேட்டையனின் வசூல் வேட்டை ஆரம்பம்

அதோடு மட்டுமல்லாமல் படமும் இதுவரை வெளியான சைக்கோ திரில்லர் சாயலில் இருப்பதால் பெரிய அளவில் கவனம் இருக்கவில்லை. மேலும் இறைவன் படம் நேற்றைய தினம் மட்டும் 1.62 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இனி வேலை நாட்கள் என்பதால் இந்த படங்களில் வசூல் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் அடுத்த வாரம் விஜய் ஆண்டனியின் ரத்தம், திரிஷாவின் தி ரோடு போன்ற படங்களும் போட்டிக்கு வருகிறது. எனவே போட்ட பட்ஜெட்டையே சந்திரமுகி 2 மற்றும் இறைவன் படங்கள் எடுக்குமா என்ற சந்தேகம் தான் இப்போது ஏற்பட்டு இருக்கிறது. மேலும் சந்திரமுகி 2 படத்தால் லைக்கா மிகுந்த நெருக்கடியை சந்திக்க இருக்கிறது.

Also Read: Chithha Movie Review- குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை வெளிச்சம் போட்டு காட்டிய சித்தா.. முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்