சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

Chithha Movie Review- குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை வெளிச்சம் போட்டு காட்டிய சித்தா.. முழு விமர்சனம்

Chithha Movie Review: விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினி, சேதுபதி போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சித்தா. ஒரு அற்புதமான கதை தேர்வை கையில் எடுத்திருக்கிறார் சித்தார்த். அதாவது இப்போது குழந்தைகளுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அப்படி ஒரு கதை தான் சித்தா படம். ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் இருக்கும் சித்தார்த் அண்ணனை இழந்த பின்பு அவரது மகள் மற்றும் மனைவி ஆகியோருடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அண்ணன் மகள் மீது அதீத பாசத்தை கொட்டி வளர்த்து வருகிறார். அதேபோல் நண்பர்களுடனும் அவரது நட்பு மிகவும் ஆழமாக இருக்கிறது.

Also Read : சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு போட்டி போடும் 2 வில்லன்கள்.. அக்கட தேசத்தில் தான் தேடி எடுப்பேன் என்று அடம் பிடித்த ராஜா

மற்றொருபுறம் நிமிஷா சஜயனுடன் உடன் காதல் காட்சிகளையும் அழகாக காட்டி உள்ளனர். மேலும் ஈஸ்வரனின் நண்பர் வீட்டிலும் ஒரு மகள் இருக்கிறார். அவரும் ஈஸ்வரனின் அண்ணன் மகளும் நெருங்கிய தோழிகளாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் நண்பனின் மகள் பள்ளிக்கு சென்று வந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் போய் விடுகிறது.

அதன் பிறகு தான் அந்த குழந்தை உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்ற விஷயம் தெரிகிறது. மேலும் அந்த பழி சித்தார்த்தின் மீது விழுகிறது. அதிலிருந்து சித்தார்த் வெளிவந்து உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தான் சித்தா. இது குழந்தைகளுக்கான வன்கொடுமை சம்பந்தமான கதையாக மட்டும் எடுக்கவில்லை.

Also Read : சித்தார்த்தின் டேட்டிங் வலையில் சிக்கி 5 நடிகைகள்.. கல்யாண ஆசையையே வெறுக்க வைத்த திரிஷாவின் உறவு

குழந்தைகளை பெற்றோர்கள் கவனிப்பில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். மேலும் சில இடங்களில் மேம்போக்காக சொல்வது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த காட்சிகளை மிகவும் அழுத்தமாக கொடுத்திருந்தால் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திருக்கும்.

மேலும் கமர்சியல் படங்களை கொடுத்து வரும் சித்தார்த் சமூக அக்கறை கொண்ட கதைகளத்தில் நடித்திருப்பது பாராட்டக் கூடிய விஷயம். சித்தா படத்தில் கதாநாயகர்களின் தேர்வு சரியாக அமைந்துள்ளது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. கண்டிப்பாக பெற்றோர்கள் ஒரு முறையாவது இந்த படத்தை பார்க்க வேண்டும்.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.5/5

- Advertisement -

Trending News