பாவம்யா அந்த மனுஷன் இப்படியா டிரோல் செய்வீங்க.. அஜித்தை வச்சு செய்த நெட்டிசன்கள்

நடிகர் அஜித் ஒரு நாடிகராக மட்டுமின்றி பைக் ரேசராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படங்களில் நடிப்பதைவிட பைக்கில் ரைடு செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவார். சமீபத்தில் கூட பைக்கில் பல மாநிலங்களுக்கு அஜித் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர அஜித் சைக்கிளிங் செல்வதிலும் ஆர்வமாக இருப்பார். முன்னதாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற சமயத்தில் நடிகர் அஜித் அவரது நண்பர்களுடன் இணைந்து ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள் அந்த சமயத்தில் வைரலானது.

தற்போது அந்த வரிசையில் அஜித்தின் சைக்கிளிங் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி அந்த புகைப்படத்தில் அஜித் இருட்டில் நெற்றியில் லைட் மாட்டிக் கொண்டு சைக்கிளுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அஜித்தை பயங்கரமாக டிரோல் செய்ய தொடங்கி விட்டார்கள்.

ajith-cycle
ajith-cycle

இதுவரை அஜித்தின் புகைப்படம் வைரலாகி மட்டுமே வந்த நிலையில் தற்போது டிரோல் செய்யப்பட்டு வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த சிலர் நாட்டாமை படத்தில் கவுண்டமணி நெற்றியில் லைட் மாட்டிக்கொண்டு செந்திலை தேடி செல்வார் அல்லவா அந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு கலாயத்து வருகிறார்கள்.

மேலும் சிலர் இருட்டில் எதுக்கு சைக்கிளிங்? இதெல்லாம் தேவையில்லாத விளம்பரம் என அஜித்தை விமர்சனம் செய்து வருகிறார்கள். இது என்னடா ஏகேவுக்கு வந்த சோதனை. மற்றொருபுறம் அஜித்தின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்