தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் ஓடிடி தளங்கள்.. அப்பவே இதை ஆரம்பித்த சேரன் 

சமீபகாலமாக வெளிநாடுகளைப் போலவே இந்தியாவிலும் ஓடிடி தளங்கள் பிரபலமாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.

அதில் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்கள் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

இதற்கு முன்பும் கூட சூர்யாவின் திரைப்படமான சூரரைப்போற்று படமும் ஓடிடி வெளியானது. இப்படி ஓடிடி தளங்கள் பிரபலமாவதற்கு முன்பே தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஒருவர் சினிமா டூ ஹோம் என்ற முறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் வேறு யாருமல்ல தமிழில் ஆட்டோகிராப் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தான். இவரின் இயக்கத்தில் வெளியான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தை சேரன் முதன்முதலாக நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்டார்.

இந்த திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோவான சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு சுமார் 5 திரைப்படங்கள் இதே பாணியில் வெளிவர தயாராக இருந்தது.

ஆனால் சினிமா டூ ஹோம் என்ற முறைக்கு ரசிகர்களிடம் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் திரைப்படத்தை இப்படி வெளியிடும் யோசனையை சேரன் கைவிட்டுவிட்டார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து இந்த ஓடிடி முறை தமிழ்நாட்டில் பிரபலமடைய தொடங்கியது.

தற்போது இந்த முறைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதால் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியானாலும் ஒரு சில வாரங்களிலேயே இப்படி ஓடிடி தளங்களிலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்று இந்த ஓடிடி தளங்கள் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், இதற்கு அடித்தளம் போட்டது என்னவோ நம்ம சேரன் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்