மாநாட்டுக்கு ஆப்பு வச்ச பிரபலம்.. சிம்பு அழுகைக்கு பின்னாடி உள்ள ரகசியம்

நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றால் அது மாநாடு படத்துக்குத்தான். மாநாடு படத்தின் டீசர் பாடல்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றுள்ள நிலையில் வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

முன்னதாக தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் போட்டி போட இருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படம் தள்ளிச் சென்றது. சரி சோலோவாக ரிலீஸ் செய்து எப்படியாவது போட்ட காசை எடுத்து விடலாம் என தயாரிப்பாளர் நம்பிக்கொண்டிருந்த நிலையில் அதை மண்ணையும் போடும் விதமாக தமிழ்நாடு அரசு 2 தடுப்பு ஊசிகள் போட்டு இருந்தால் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை போட்டுள்ளது.

இதைக் கேட்டதுமே படக்குழுவினருக்கு பெரிய அதிர்ச்சி. மாநாடு படத்திற்கு முன்னர் வெளியான அண்ணாத்த படத்திற்குத்தான் ஏகப்பட்ட கூட்டங்கள் தியேட்டருக்கு வந்த நிலையில் அப்போது ஏன் இந்த சட்டத்தை போதவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இது படக்குழுவினரை மட்டுமில்லாமல் தியேட்டர் உரிமையாளர்களையும் அப்செட் ஆகி உள்ளது.

இந்த முடிவுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். கடைசியாக நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் உதயநிதி விஷாலுக்கு ஆதரவு தந்த நிலையில் சிம்பு விஷால் உதயநிதி ஆகியோர் எதிர்த்த சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது தெரிந்ததே.

அதுமட்டுமில்லாமல் மாநாடு படத்தின் எதிர்பார்ப்பு இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதால் கண்டிப்பாக அந்த படத்தின் வசூலை குறைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி செயல்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். அதைப்போல் அண்ணாத்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வாங்கி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் சிம்புவை உதயநிதி பழிவாங்குகிறார் என்கிறார்கள்.

இதனால்தான் மாநாடு இசை வெளியீட்டு விழாவில் சிம்பு மேடையில் அழுததாகவும் கூறுகின்றனர். இவர்களுக்குள் இப்படி ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருப்பது இப்போதுதான் வெளியில் வந்துள்ளது. இந்த சட்டம் பொதுமக்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்டதால் அல்லது சொந்த பிரச்சனையில் வந்ததா என்பது பொங்கல் வலிமை ரிலீசில் தெரிந்துவிடும். காரணம் வலிமை படத்தை உதயநிதி தான் வாங்கி வெளியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்