8 வருடங்கள் கழித்து மீண்டும் விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. இந்த வாட்டியாவது முன்னணி நடிகை ஆவாங்களா?

தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாக வலம் வருபவர் விஷால். கடந்த சில வருடங்களாக விஷால் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் மார்க்கெட் ரீதியாக அவருக்கு கொஞ்சம் அடிதான்.

அதை எப்படியாவது மீட்டெடுத்து விட வேண்டும் என தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். மேலும் வழக்கமான படங்களிலிருந்து ஒதுங்கி கொஞ்சம் வித்தியாசமான படங்களை தர முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் உருவாகிவரும் திரைப்படம் தான் வீரமே வாகை சூடும். தனிமனிதனின் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தைத் சரவணன் என்பவர் இயக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விஷால் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக உள்ளதாம். ஆனால் இன்னும் இயக்குனர் யார்? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் விஷாலுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான சமர் படத்தில் அவருடைய முன்னாள் காதலி கேரக்டரில் நடித்தவர் சுனைனா.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி எப்படியாவது மீண்டும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறாராம் சுனைனா. சுனைனாவுக்கு தமிழில் மார்க்கெட் அப்படி இப்படி இருந்தாலும் தெலுங்கில் அவருக்கு ஒரு நிலையான மார்க்கெட் இருக்கிறது.

sunaina-cinemapettai-01
sunaina-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்