புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாமல், வந்த வேகத்தில் திரும்பிச் சென்ற 9 நடிகர்கள்.. அதிலும் 4 வாரிசு நடிகர்கள்

வருடங்கள் பல கடந்த தமிழ் சினிமாவில் வருவதும் போவதுமாய் இருந்தவர்கள் பலர். இந்த வரிசையில் தல தளபதி கமல் ரஜினி போன்ற ஜாம்பவான்களோடு இணைந்து அறிமுகம் கண்டவர்களும் பலருண்டு தோல்வி வெற்றிகளை சரியாக கையாள்பவர்கள் மட்டுமே திரையுலகிலும் மக்கள் மனதிலும் நீடிக்க முடியும் என்பதில் எந்த கேள்வியுமல்ல.

விக்ரம் ஆதித்யா: தமிழில் விசில் படத்தில் அறிமுகம் கண்டவர் ஆதித்யா அழகிய அசுரா பாடலுக்கு நடிகை ஷெரினுடன் செம ஆட்டம் போட்டவருக்கு அதற்கு பிறகு அப்படி ஒரு ஹிட் அடிக்கமுடியாமலே போனது. 2006 வரை அவ்வப்போது தென்பட்டவர காணாமலே போய்விட்டார் சினித்துறையிலிருந்து.

யோகி: அழகிய அசுரா படத்தில் அறிமுகம் கண்டவர் கட்டுமஸ்தானா உடலும் கலகலப்பான பேச்சும் என இருந்தவர் அதுவே முதலும் கடைசியுமான படமாகிவிட்டது போலும்.

ரவிகிருஷ்ணா: செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “7ஜி ரெயிண்போ காலனி” படத்தில் அறிமுகமானவர் வெகு சில படங்களிலேயே வெற்றி பெற முடியாமல் போய்விட்டார் ஓரளவு ஓடிய “கேடி” அவருக்கு மறுவாய்ப்பை தரும் என எதிர்பார்த்தாலும் அப்படி ஏதும் இல்லாமல் போனது.

ravi-krishna-new-getup
ravi-krishna-new-getup

மனோஜ்: இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமானவர் மனோஜ். தாஜ்மஹால் படத்தின் வழியாய் அறிமுகம் கண்டவருக்கு அதற்கு பிறகு அப்படி ஏதும் இல்லை என்றே சொல்லலாம். டயலாக் டெலிவரியில் பிச்செடுக்கும் படங்களை தரும் பாரதி ராஜாவின் மகனுக்கும் அதில் தான் பிரச்சினையே இன்னும் சில படங்கள் பாரதிராஜா தந்திருந்தால் வளர்ந்திருக்கலாமோ என்னவோ.

அப்பாஸ்: காதல் தேசம் படத்தில் அறிமுகமானவர் அப்பாஸ் சாக்லேட் பாயாகவே வலம் வரும் அளவிற்கு சில படங்களை தந்து வெற்றி நாயகனாகவும் வலம் வந்தார். சில படங்களில் சில சிறிய கேரக்டர்களிலும் வந்து சென்றார். இப்போது சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு நியூசிலாந்தில் வசித்து வருகிறார்.

சத்யா: நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா அமரகாவியம் என்கிற படத்தின் வாயிலாக அறிமுகம் கண்டவருக்கு அத்தனை எளிதாய் அடுத்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

சக்தி: இயக்குனர் பி.வாசுவின் மகனும் நடிகருமானவர் சக்தி. சமீபத்தில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கழந்தை நட்சத்திரமாய் அறிமுகம் கண்டவருக்கு காலம் அத்தனை எளிதாய் கைகூடவில்லை.

கரண்: ஒரு கால கட்டத்தில் சாமி படங்களின் வில்லன் என்றால் அது கரண் தான் என்பது போன்று எழுதப்படாத விதியாகவே இருந்தது கண்ணாத்தாள் துவங்கி எத்தனையோ ஹிட்களை வாரி வழங்கியவருக்கு அத்தனை எளிதாய் தரவில்லை நாயகன் வேடம். நாயகனாகவும் சில படங்கள் நடித்த கரண் ஒரு கட்டத்தில் ஓரம் கட்டப்பட்டார்.

பரத்: தமிழில் சில படங்களில் தோன்றி அப்போதே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். ஆக்சன் படங்களுக்காக தயாரானவருக்கு ஆஃப் மோட் செய்தது திரை. இப்படியாக வந்தவர் போனவர்களில் நின்றவர்கள் சிலர். இவர்களும் அப்படியாக சிலர் மனதில் நின்றவர்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

Trending News