திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

திருவிளையாடல் பட தருமிய நியாபகம் இருக்கா?. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய நாகேஷின் 7 படங்கள்

Actor Nagesh Best 7 Movies: ஒல்லியான தேகம், அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு கர்நாடகாவில் இருந்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் சினிமாவிற்கு வந்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞன் நாகேஷ். பழைய படங்கள் எல்லாம் ரொம்ப போர் என சொல்லும் 2k கிட்ஸ்கள் கூட மிஸ் பண்ணாமல் நாகேஷின் இந்த ஏழு படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

காதலிக்க நேரமில்லை: எப்படியாவது ஒரு சினிமா படம் இயக்க வேண்டும் என்று போராடும் இளைஞனாக நாகேஷ் இந்த படத்தில் நடித்திருந்தாலும் இவர் வரும் காட்சிகள் அத்தனையுமே சிரிப்புதான். அதிலும் அவருடைய அப்பா கேரக்டரில் நடித்த பாலையாவுடன் வரும் காட்சி ஒன்று இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சச்சு உடன் மலர் என்ற முகம் ஒன்று மலரட்டும் பாடலுக்கு நாகேஷ் ஆடியிருப்பது பயங்கர வரவேற்பை பெற்றது.

திருவிளையாடல்: நாகேஷ் என்றாலே தமிழ் சினிமா இருக்கும் வரை திருவிளையாடல் பட தருமி நம் நினைவில் இருப்பார். இரண்டு மகா கலைஞர்களுக்கு நடுவே நடந்த நடிப்புப் போட்டி என்று கூட இதை சொல்லலாம். சிவாஜி கணேசனுக்கு முன்பு தைரியமாக இப்படி ஒரு நடிப்பை நடித்து அசத்தியிருப்பார் நாகேஷ். இந்த காட்சியில் நம்மை விட நாகேஷ் தான் அதிகம் ஸ்கோர் செய்வார் என தெரிந்திருந்தும் அந்த காட்சியை வெட்டாமல் சிவாஜி வைக்க சொன்னதாக கூட செய்திகள் உண்டு.

Also Read:ஈஸியா ஏமாற்றப்படும் வெகுளித்தனமான 4 நடிகர்கள்.. உண்மையில் குழந்தை மனசு படைத்த மன்சூர்

எதிர்நீச்சல்: இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் மாடிப்படி மாதுவை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ஐந்து குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு வீட்டில் மாடிப்படிக்கு கீழே இருக்கும் சின்ன இடத்தில் வசித்துக்கொண்டு அவர்கள் சொல்லும் வேலையை செய்து பிழைப்பை ஒட்டிக்கொண்டே கல்லூரி படிக்கும் மாணவனாக நாகேஷ் உணர்ச்சிபூர்வமான நடிப்பில் மிளிரி இருப்பார்.

தில்லானா மோகனாம்பாள்: நாகேஷ் வெறும் காமெடியன் மட்டும் இல்லை. வில்லத்தனத்தையும் கையில் கொடுத்தால் அத்தனை பேரையும் கதற விட்டுவிடுவார் என்பதை நிரூபித்த படம்தான் தில்லானா மோகனாம்பாள். இந்தப் படத்தில் சவடால் வைத்தியாக நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார் இவர்.

அதே கண்கள்: அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய திரில்லர் படமாக வெளியானது தான் அதே கண்கள். இந்த படத்தில் ரவிச்சந்திரனின் நண்பனாக வரும் நாகேஷ், வாடகை வீடு கிடைப்பதற்காக பெண் கெட்டப்பில் நடித்திருப்பார். வீட்டின் ஓனர், நாகேஷ் உண்மையான பெண் என நினைத்துக் கொண்டு அடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

Also Read:திரையில் கொடூர வில்லன்களான 5 நிஜ ஹீரோக்கள்.. குழந்தை மனசோடு சுற்றித் திரியும் பாக்சர் தீனா

பட்டணத்தில் பூதம்: அந்த காலகட்டத்தில் வெளியான பேண்டஸி படம் தான் பட்டணத்தில் பூதம். இந்த படத்தில் நாகேஷ் காமெடியன் என்று கூட சொல்லி விட முடியாது. இரண்டாவது கதாநாயகனாக ஜெய்சங்கர் உடன் இணைந்து நடித்திருப்பார். பூதத்துடன் இவர் அடிக்கும் லூட்டி மற்றும் இவருடைய காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருக்கும்.

சர்வர் சுந்தரம்: நாகேஷை முழுக்க முழுக்க கதையின் நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சர்வர் சுந்தரம். ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்து ஓட்டலில் வேலை செய்யும் நாகேஷுக்கு வாய்ப்பு கிடைத்து, பெரிய நடிகனாக மாறிய பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் தான் இந்த படத்தின் கதை.

Also Read:பாக்கியராஜ் நெகட்டிவ் கேரக்டரில் ஹிட் அடித்த 4 படங்கள்.. சொத்துக்காசப்பட்டு மனைவியை கொல்லும் கொடூரன்

- Advertisement -

Trending News