வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

திரையில் கொடூர வில்லன்களான 5 நிஜ ஹீரோக்கள்.. குழந்தை மனசோடு சுற்றித் திரியும் பாக்சர் தீனா

திரைப்படங்களில் கொடூர வில்லத்தனமாக நடிக்கும் சில நடிகர்கள், நிஜ வாழ்க்கையில் பிறருக்கு எக்கசக்க உதவிகள் செய்து கொண்டு இருப்பார்கள். இருப்பதை கொடுப்பதற்கு பெரிய மனசு வேண்டும். அதுவும் தன்னிடம் இருப்பதை அனைவருக்கும் கொடுத்து உதவும், குழந்தை மனசு கொண்ட 5 வில்லன் தோற்றத்தில் இருக்கும் ரியல் ஹீரோக்கள் யார் என பார்ப்போம்.

பாக்சர் தீனா: விருமாண்டி திரைப்படத்தில் ஜெயில் வாடனாக திரையுலகுக்கு அறிமுகமானவர் தீனா. ஒரு வார்த்தை ஓகோன்னு வாழ்க்கை என்பது போல் ஒரே டயலாக்கில், சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் பயங்கர பேமஸ் ஆனார். அதில் இருந்து தற்போது வெளியாகி கலெக்ஷனில் முதலில் இருக்கும் ஜவான் படத்திலும் நடித்துள்ளார். நடிகர் விருச்சிக காந்த் குடும்பத்திற்கு உதவி செய்தது, மட்டும் இல்லாமல் கொரோனா சமயத்தில் சுமார் 250 குடும்பத்திற்கு தேவைப்படும் மளிகை பொருட்கள், உணவு, அரிசி, கோதுமை போன்றவற்றை கொடுத்தார்.

Also Read:அட்லிக்கு ஒரு டார்லிங்னா, நெல்சனுக்கு ஒரு செல்லாகுட்டி.. கடுப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்

ராஜ சிம்ஹன்: குட்டி புலி திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் ராஜசிம்ஹன். மேலும் கொம்பன், என்னை அறிந்தால் போன்ற படங்களிலும் ரசிகர்களை கவர்ந்தார். நடிப்பதில் மட்டுமின்றி மக்களுக்காக நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக அவர் சென்னை சாலிகிராமத்தில் கஷ்டப்படும் மக்களுக்காக தினமும் உணவு வழங்கியுள்ளார்.

சோனு சூட்: ஹிந்தி திரை உலகின் பயங்கரமான வில்லன்களில் ஒருவர் சோனு சூட். எண்ணில் அடங்காத உதவிகளை பொதுமக்களுக்காக செய்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் மும்பையில் அவதிப்படும் மக்களுக்காக இருக்க இடமும், மளிகை பொருட்களும், உணவும், மருத்துவ உதவிகளும் செய்தவர். பிறகு சாரிடி மூலம் மாணவர்களுக்கு இலவச படிப்பு போன்ற பல உதவிகளை செய்து வருகிறார்.

Also Read:அந்த நடிகர்னா ஓகே, இயக்குனர்னா கசக்குதா.. தனக்குத்தானே ஏழரை கூட்டிக் கொள்ளும் சாய் பல்லவி

சுமன்: குருவி திரைப்படத்தில் கோச்சாவாக மிரட்டியவர் சுமன். இவர் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். பெரும்பாலும் தெலுங்கிலே நிறைய படங்கள் நடித்துள்ளார். 70களில் இறுதியில் திரையுலகில் தொடங்கிய பயணம், கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் தற்போது வரை நடிக்கிறார். இவரும் உதவிகள் செய்வதில் பயங்கர ஈடுபாடு கொண்டவர்.

லால்: சண்டைக்கோழி திரைப்படத்தின் வில்லன் லால் மலையாள திரை உலகின் லீடிங் நடிகர்களின் ஒருவர். திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது, திரைக்கதை எழுதுவது போன்ற எல்லா துறையிலும் கலக்கியவர். என்னதான் பார்ப்பதற்கு கரடு முரடாக தோற்றம் இருந்தாலும், குணத்தில் தங்கம் என்பது போல் எக்கச்சக்க சமூக சேவைகளை செய்து வருகிறார்.

Also Read:தாலியை கழட்டி எறிய துணிந்த நந்தினி, கன்னத்தை பழுக்க வைத்த மாமியார்.. வளர்ப்பு மகளை அசிங்கப்படுத்தும் கதிர்

- Advertisement -

Trending News