63 வயது நடிகருக்கு 4-வது மனைவியான ஆர்ஜே பாலாஜியின் மாமியார்.. நீதிபதி வச்ச ஆப்பு!

Actor RJ.Balaji: ரேடியோ ஜாக்கி ஆக தனது சினிமா பயணத்தை துவங்கிய ஆர்ஜே பாலாஜி அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தற்போது நடிகராகவும் சினிமாவில்  நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி போன்ற படத்திற்குப் பிறகு அவர் இயக்கி நடித்த ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியின் காதலியான அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக பிரபல கன்னட நடிகை பவித்ரா நடித்திருப்பார். இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் இவர் பழம்பெரும் தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவின் மகனும் நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டார்.

Also Read: நிஜ அரசியல்வாதிகளுக்கு டஃப் கொடுத்த 5 ரீல் நடிகர்கள்.. எப்போதும் ஃபேவரிட் ஆக இருக்கும் அமாவாசை

நரேஷும் 2 முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். மூன்றாவதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரை சமீபத்தில் விவாகரத்து செய்துவிட்டார். சுமார் 20 வயது வித்தியாசத்தில் நரேஷ் நடிகை பவித்ராவை நான்காவது திருமணம் செய்து கொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால்  நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா தற்போது அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து வருகிறார். தன் சொந்த வாழ்க்கையை வைத்து ‘மல்லி பெல்லி’ என்ற பெயரில் படத்தை எடுக்கப்பட்டதாகவும் அந்த படத்தில் நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் நடித்துள்ளனர் என்றும் அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.  

Also Read: விஜயின் ஆசையை நிறைவேற்றாத ஆர்.ஜே. பாலாஜி.. மீண்டும் வாய்ப்பு கொடுத்த விஜய்

இதனால் அந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று 3-வது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் புகார் அளித்து வழக்கு தொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக இரு தரப்பினரையும் விசாரித்த நீதிபதி ரம்யாவின் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தணிக்கை குழு அந்த படத்தின் ஸ்டோரி ஒரு கற்பனை கதை தான் என சான்றிதழ் அளித்ததால் படத்திற்கு தடை விதிக்க முடியாது என திட்ட வட்டமாக சொல்லிவிட்டனர். 

அதுமட்டுமல்ல பல வருடங்களாக பிரிந்து வாழும் 3-வது மனைவி ரம்யா, 4-வது மனைவியுடன்  குடும்பம் நடத்தி வரும் நரேஷ் வீட்டிற்கு சென்று  எந்த பிரச்சனையும் பண்ணக்கூடாது என்றும் நீதிபதி வார்னிங் கொடுத்திருக்கிறார்.

Also Read: கிளி ஜோசியம் பார்த்து படத்தை ஓட வைக்கும் RJ பாலாஜி.. ஒரே நாள்ல தியேட்டர் விட்டு ஓடாம இருந்தா சரி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்