ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகைகள்.. அட போங்கடா என திருமணம் செய்து செட்டில் ஆன சிம்பு ஜோடி

நடிகைகளில் பலர் நல்ல நடிப்பு திறமை இருந்தும், அழகு இருந்தும் சினிமாவில் நிலைக்க முடியாமல் போய்விடுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மிக முக்கியமான காரணம் என்னவென்றால் அவர்கள் நடிக்கும் படம் தோல்வியடைவது தான். ஏதாவது ஒரு படம் தோல்வி அடைந்தால் கூட அந்த நடிகையை ராசி இல்லாதவர்கள் என இண்டஸ்ட்ரியில் இருந்து ஒதுக்கி வைத்து விடுகிறார்கள்.

வாணி போஜன்: நடிகை வாணி போஜன் மாடலாக இருந்தவர். அதன்பின்னர் தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொடர்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இவரை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்றே அழைத்தனர். இவருடைய சினிமா வருகை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், தொடர் தோல்வி படங்களை தான் கொடுத்தார்.

Also Read: வாணி போஜனிடம் மயங்கி, டேட்டிங் முடித்து கழட்டிவிட்ட 4 நடிகர்கள்.. அடுத்தடுத்து 2 பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ

மகிமா நம்பியார்: மகிமா நம்பியார் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர். சாட்டை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். குற்றம் 23, புரியாத புதிர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தாலும், நிறைய தோல்வி படங்களை கொடுத்ததால் இவர் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

மேகா ஆகாஷ்: மேகா ஆகாஷ் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்தார். இப்போது இவருக்கு எந்த பட வாய்ப்புகளும் இல்லை.

அதிதி ராவ்: அதிதி ராவ் ஹைதாரி 2007 ஆம் ஆண்டு சிருங்காரம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்தார். நல்ல நடிப்பு திறமை இருந்தும் இன்னும் இவர் ராசியில்லாத நடிகையாகவே கருதப்படுகிறார்.

Also Read: கிசுகிசுவை உண்மையாக்கிய சித்தார்த்.. அம்பலமான காதல் ரகசியம்

கயல் ஆனந்தி: ஆனந்தி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொறியாளன் என்ற படம் மூலம் அறிமுகமானார். இவர் கயல், பரியேறும் பெருமாள் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். ஆனாலும் இவரை சினிமாவில் ராசியில்லாத நடிகையாகவே பார்க்கின்றனர்.

மஞ்சிமா மோகன்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தபோது இவருக்கு தமிழ்நாட்டில் அதிக அளவு ரசிகர்கள் இருந்தனர். பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Also Read: கல்யாண மேடையில் அவமானப்படுத்திய உறவினர்கள்.. ஹனிமூன் வேண்டாம் என மஞ்சிமா எடுத்த அதிரடி முடிவு

Next Story

- Advertisement -