டிஆர்பி ரேட்டிங்கில் புது மாற்றத்தை ஏற்படுத்திய 6 சீரியல்கள்.. சன் டிவி கிட்ட நெருங்க முடியாமல் தவிக்கும் விஜய் டிவி

Top 6 Trp Rating List: வருகிற புதுப்புது படங்கள் மக்களுக்கு பொழுதுபோக்குக்காக இருக்குதோ இல்லையோ, சீரியல் தான் ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் மக்களின் பொழுதுபோக்காக ஆக்கிரமித்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் என்று மூன்று சேனல்கள் புதுப்புது நாடகங்களை கொண்டு வந்தாலும் சன் டிவிக்கு ஈடாக எந்த ஒரு சேனலும் வருவதில்லை. முக்கியமாக சன் டிவிக்கு அடுத்தபடியாக இருக்கும் விஜய் டிவி சேனல் எவ்வளவுதான் போராடினாலும் சன் டிவி கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு தவித்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் புதுசாக வந்த மல்லி சீரியல் கடந்த வாரம் போல இந்த வாரமும் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. டிஆர்பி ரேட்டிங் இல் 6.88 புள்ளிகளை பெற்று அதே இடத்தை எடுத்து தக்க வைத்திருக்கிறது. வெண்பா அம்மாவின் பாசத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மொத்த பாசத்தையும் காட்டும் வகையில் மல்லி, விஜய் வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த வகையில் மல்லி தன்னுடைய அம்மாவாக ஏற்றுக் கொண்டு விஜய்யை கல்யாணம் பண்ண சொல்லி வெண்பா சொல்கிறார். அதற்கு மல்லியும் சம்மதம் கொடுத்த நிலையில் இவர்களுடைய திருமண வாழ்க்கை நோக்கி அடுத்த கட்ட காட்சிகள் நடைபெற இருக்கிறது.

சிங்கப்பெண்ணுக்கு ஏற்பட்ட தடுமாற்றம்

இதனை அடுத்து கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த விஜய் டிவி சீரியல் ஆன சிறகடிக்கும் ஆசை சீரியல் இந்த வாரம் 7.71 புள்ளிகளை பெற்று 5வது இடத்திற்கு போய்விட்டது. அதற்கு காரணம் ரோகிணி பற்றிய விஷயம் எதுவும் தெரியாமல் முத்து மற்றும் மீனாவை டம்மியாக காட்டி போர் அடிக்க வைப்பதால் சற்று பின்தங்கி விட்டது.

அடுத்ததாக கடந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்த புத்தம் புது சீரியரான மருமகள் 7.85 புள்ளிகளை பெற்று இந்த வாரம் 4வது இடத்திற்கு வந்திருக்கிறது. ஆதிரையை கொடுமைப்படுத்தும் சித்தியிடம் இருந்து காப்பாற்றும் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி கவலைப்படும் ஒரு யதார்த்தமான தந்தையின் பாசத்தை வைத்து கதை நகர்கிறது.

இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக நான்காவது இடத்தில் இருந்த வானத்தைப்போல சீரியல் 7.89 விலை பெற்று தற்போது 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. பாசமான அண்ணன் தங்கையாக இருக்கும் சின்ராஸ் மட்டும் துளசி ஒருவரை ஒருவர் பார்க்காமல் பிரிந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் இதில் பொன்னி செய்த வேலைகள் எப்பொழுது வெளிவரும் என்பதை பார்க்க ஆவலாக கதை போய்க் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக சீரியல் தொடங்கி முதல் வாரத்தில் இருந்து கடந்த வாரம் வரை முதல் இடத்தை கெட்டியாக பிடித்த சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 8.74 புள்ளிகளை பெற்று 2வது இடத்திற்கு போய்விட்டது. இதற்கு காரணம் ஆனந்தியிடம் அன்பு தான் அழகன் என்ற உண்மையை சொல்லாமல் இழுத்தடிக்கும் விதமாக புதுப்புது பிரச்சினையில் ஆனந்தி சிக்கி தவிக்கும் விதமாக கதை நகர்வதால் சற்று பின்னுக்குப் போய்விட்டது.

இதனைத் தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக இரண்டாவது இடத்தில் இருந்த கயல் சீரியல் தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங் 8.80 புள்ளிகளைப் பெற்று கயல் மாஸ் காட்டிருக்கிறார். அதற்கு காரணம் கயல் மற்றும் எழிலின் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அடுத்த கட்ட கல்யாண வேலையை நடக்கப் போகிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் எழில் அம்மா சிவசங்கரி தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். கயலையும் கடத்தி வைத்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்ததால் பரபரப்பாக கதை போய்க்கொண்டிருக்கிறது.

கடந்த வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த சீரியல்

Next Story

- Advertisement -