புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நானும் நடிகன்-டா என கண்ணீர் வரவழைத்த வடிவேலுவின் 6 படங்கள்.. சீரியஸாக நடித்து ரீ என்ட்ரியில் ஜெயித்த மாமன்னன்

Vadivelu Acted Centiment Movies: வடிவேலு என்றால் நகைச்சுவை மன்னன் என்றும் நக்கல், நையாண்டியில் இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை என்று மக்கள் மனதில் பதிந்தவர். அப்படிப்பட்ட இவர் சென்டிமென்ட் காட்சியிலும் என்னால் நடிக்க முடியும் என்று சில படங்களில் நடித்து பார்ப்பவர்களின் மனதை கலங்கடிக்க வைத்திருப்பார். அப்படிப்பட்ட இவருடைய சீரியஸாக சில படங்களை பற்றி பார்க்கலாம்.

ராஜகாளியம்மன்: ராமநாராயணன் இயக்கத்தில் 2000 ஆண்டு ராஜகாளியம்மன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரம்யா கிருஷ்ணன், கரண், கௌசல்யா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பாசமான அண்ணன் தங்கையாக கௌசல்யா மற்றும் வடிவேலு நடித்திருப்பார்கள். தங்கையே செரியாத்தனமாக ஒரு அட்டூழியம் செய்யும் குடும்பத்திடம் தாரை பார்த்து கொடுத்து ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கும் பாசமான அண்ணனாக வடிவேலு நடித்திருப்பார். அதன் விளைவாக கெட்டவர்களால் வடிவேலு உயிர் பரிதாபமாக போய்விடும். இப்படத்தில் வடிவேலு சீரியசான கேரக்டரில் நடித்திருப்பார்.

Also read: சிம்பு இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு. . மாமன்னன் படத்தால் அடித்த ஜாக்பாட்

சங்கமம்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சங்கமம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரகுமான், விந்தியா,மணிவண்ணன், ராதாரவி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் மணிவண்ணனின் பாசத்தைக் கொட்டி பிள்ளைகளை வளர்த்து வருவார். இவருடைய அளவு கடந்த அன்பை புரிந்து கொண்டு வடிவேலு பேசும் ஒவ்வொரு காட்சிகளும் கண்களில் இருந்து கண்ணீர் வர வைக்கும். முக்கியமாக கிளைமேக்ஸ் காட்சியில் மணிவண்ணன் இறப்பிற்கு பின் வடிவேலு நடித்திருக்கும் செண்டிமெண்ட் காட்சி அனைவரையும் கலங்கடித்து இருப்பார்.

பொற்காலம்: சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு பொற்காலம் திரைப்படம் வெளிவந்தது. இதில் முரளி, மீனா, சங்கவி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் முக்கிய கதையானது ஊனமுற்றவர்களின் மனவேதனையை எடுத்து சொல்லும் படமாக வெளிவந்தது. இதில் வடிவேலு பாடிய ஒரு பாடலில் மூலம் அனைவருக்கும் மன தைரியத்தையும் நம்பிக்கை கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். முக்கியமாக கிளைமேக்ஸ் கட்சியில் தன் நண்பனின் தங்கையை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கொடுக்கும் வசனங்கள் அனைத்தும் செண்டிமெண்டாக இருக்கும்.

Also read: சக நடிகரை தற்கொலைக்குத் தூண்டிய வடிவேலு.. நாளுக்கு நாள் எகிறும் மாமன்னனின் க்ரைம் லிஸ்ட்

வெற்றிவேல் சக்திவேல்: லட்சுமி பிரியன் 2005 ஆம் ஆண்டு வெற்றிவேல் சக்திவேல் திரைப்படம் வெளிவந்தது. இதில் சத்யராஜ், சிபிராஜ், குஷ்பூ மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் குஷ்புவின் தம்பியாக வடிவேலு நடித்திருப்பார். அவ்வப்போது சத்யராஜிடம் திட்டுவாங்கிக் கொண்டிருப்பார். அந்த சமயத்தில் ரவுடிகளால் இவர் மனதை காயப்பட்டு அனாதை என்று சொல்லி அடிக்கும் காட்சிகளில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தேவர் மகன்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி கணேசன், கமல், ரேவதி, கௌதமி, நாசர் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இசக்கி என்ற கதாபாத்திரத்தில் வடிவேலு கிளைமாக்ஸ் காட்சியில், கமலிடம் நான் பழியை ஏற்றுக்கொள்கிறேன். அருவாளை என்னிடம் கொடுங்கள் என்று கேட்கும் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் வெளிவந்தது. இதில் பகத் பாசில், உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் வடிவேலு சீரியசான கேரக்டரில் மாமன்னன் கதாபாத்திரத்தில் எம்எல்ஏ வாக நடித்திருப்பார். வழக்கம்போல் இவருடைய காமெடி எதுவுமே இல்லாமல் பொறுப்பான குடும்பஸ்தன் ஆகவும், நியாயம் நேர்மை என்று தன்னுடைய கொள்கையை கடைபிடிக்கும் ஒரு கேரக்டரில் படம் முழுக்க சீரியஸாக நடித்திருப்பார்.

Also read: கொஞ்சம் கூட செட் ஆகாத கதாபாத்திரத்தில் நடித்த 5 ஹீரோக்கள்.. விட்டதை பிடிக்க வேறு யுத்தியை கையாளும் வடிவேலு

- Advertisement -

Trending News