மனோபாலா இறப்பிற்கு முன் நடித்த 6 படங்கள்.. காட்சிகள் இருக்குமா என சந்தேகத்தை கிளப்பிய இந்தியன் 2

ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நகைச்சுவை நடிகராகவும் தன் முத்திரையை பதித்தவர் தான் மனோபாலா. ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடந்த மே 3 அன்று உடல்நல குறைவின் காரணமாக மரணமடைந்தார். இது பெரும் அதிர்வலையை கிளப்பிய நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படங்களில் அவருடைய காட்சிகள் இடம்பெருமா என்ற சந்தேகமும் இப்போது கிளம்பி இருக்கிறது. அது பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

ஆயிரம் ஜென்மங்கள்: எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ், நிகிஷா பட்டேல் நடித்திருக்கும் இப்படம் திகில் கலந்த நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் மனோபாலாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது அவர் இறந்து விட்டாலும் அவர் நடித்த காட்சிகள் கட்டாயம் படத்தில் இடம்பெறும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Also read: கால் சீட் சொதப்பாத 5 நடிகைகள்.. பஞ்சுவாலிட்டிக்காகவே 6 படங்கள் புக்கிங் ஆன ப்ரியா நடிகை

கோல்மால்: பொன் சரவணன் இயக்கத்தில் ஜீவா, சிவா ஆகியோர் நடிப்பில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் மனோபாலாவும் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவர் உயிர் இழந்து விட்டதால் அவருடைய காட்சிகள் நீக்கப்படுமா என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. இது குறித்து படகுழு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்தியன் 2: சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக இப்படம் தாமதமாகி இப்பொழுதுதான் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் படம் வெளி வருவதற்கு முன்பு இதில் நடித்த விவேக் சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அதை தொடர்ந்து தற்போது மனோபாலாவும் இறந்துவிட்டார். அதனால் இவருடைய காட்சிகள் இடம் பெறுமா என்ற ஒரு சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

Also read: குறட்டை, தூக்கம் என வித்தியாசமாக நகைச்சுவையோடு எடுத்த 5 படங்கள்.. காது கேளாமல் மாசு காட்டிய நயன்

கிக்: பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் மற்றும் தன்யா நடிப்பில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் மனோபாலாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இருப்பினும் இப்படம் வெளிவரும் போது அவருடைய காட்சிகள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

சதுரங்க வேட்டை 2: நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடிப்பில் உருவான இப்படம் பல வருடங்கள் ஆகியும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கிறது. இப்படத்தை தயாரித்த மனோபாலாவும் பல வழிகளில் இதை வெளியிடுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் மரணமடைந்து விட்டார். அவருடைய இந்த கடைசி ஆசை இனிமேலாவது நிறைவேறுமா என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.

மாப்பிள்ளை விநாயகர்: சந்தானம் மற்றும் விஜய் டிவி புகழ் ஜீவா நடிப்பில் பல வருடங்களுக்கு முன் உருவான படத்தில் மனோபாலாவும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆனால் இப்படம் பல பிரச்சினைகளின் காரணமாக வெளிவராமல் இருக்கிறது.

Also read: கிராமத்து கெட்டப்பில் கலக்கிய 5 மாடர்ன் ஹீரோக்கள்.. தூக்கு துரையாக மாஸ் காட்டிய அஜித்

- Advertisement -spot_img

Trending News