சென்டிமென்ட்டாக 43 நாட்களுக்குள் வெளியான 6 படங்கள்.. முதலும் கடைசியுமாக சிவாஜி செய்த சாதனை

சிவாஜி கணேசன் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். அந்த வகையில் சென்டிமெண்டாக 43 நாட்களிலேயே தொடர்ந்து சிவாஜியின் 6 படங்கள் வெளியாகி உள்ளது. இதுபோல வேறு எந்த ஹீரோக்களின் படங்களும் இவ்வாறு வெளியானது இல்லை. அதில் ஒரே நாளில் இரண்டு சிவாஜி படங்களும் வெளியாகி உள்ளது.

நான் பெற்ற செல்வம் : சிவாஜி, வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் நான் பெற்ற செல்வம். இப்படத்தில் சிவாஜி சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி 1956-ல் வெளியாகி உள்ளது.

Also Read : சிவாஜிக்கு பெருமையை சேர்த்த படம்.. 80 அடி கட் அவுட்டால் ஸ்தம்பித்த சென்னை

நல்ல வீடு : நான் பெற்ற செல்வம் படம் வெளியான அதே நாளில் சிவாஜியின் மற்றொரு படமான நல்ல வீடு படம் வெளியானது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், பாலையா, பண்டரிபாய் மற்றும் பலர் நடித்திருந்தார். இப்படம் அப்போது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நானே ராஜா : நான் பெற்ற செல்வம் மற்றும் நல்ல வீடு படங்கள் 1956 பொங்கல் பண்டிகை வெளியான நிலையில் ஜனவரி 25ஆம் தேதி நானே ராஜா படம் வெளியானது. இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர்.

Also Read : மொத்தமாக எம்ஜிஆர் நடித்த இரட்டைவேட படங்கள்.. டபுள் ஆக்ட் படத்தால் சிவாஜியை சரித்த புரட்சித்தலைவர்

தெனாலிராமன் : நானே ராஜா படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 நாட்கள் கழித்து சிவாஜி கணேசனின் தெனாலிராமன் படம் வெளியானது. அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து என் டி ராமராவ், பானுமதி ஆகியோர் நடித்திருந்தனர்.

பெண்ணின் பெருமை : சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம பெண்ணின் பெருமை. இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி 1956 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படத்தில் சிவாஜி கணேசன் எதிர்மறையான கதாபாத்திரத்தை நடித்திருந்தார்.

ராஜா ராணி : பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. இந்தப் படத்திற்கு கலைஞர் கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்தார். இப்படம் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாகி இருந்தது.

Also Read : நெகட்டிவ் ரோலில் சிவாஜி கலக்கிய 5 படங்கள்.. ஆல் ரவுண்டராக இருந்த நடிகர் திலகம்

Next Story

- Advertisement -