சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வாய்ப்பு கொடுத்து, வடிவேலு வேட்டையாடிய 6 நடிகைகள்.. கவர்ச்சியை காட்டியும் ஒதுக்கப்பட்ட சொர்ணா

Actor Vadivelu: வடிவேலு சினிமாவில் இத்தகைய வளர்ச்சி அடைவதற்கு அவருடைய திறமை முக்கியமான காரணம் தான். ஆனால் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வடிவேலு இப்போது விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் இப்போது சமூக வலைத்தளத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் வடிவேலு உடன் பயணித்தவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு வடிவேலுவால் சினிமா கேரியரை சீரழித்துக் கொண்ட நடிகைகளை பார்க்கலாம்.

பிரியங்கா : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் வடிவேலுவுடன் நடித்த சில படங்களிலேயே பிரபலமானவர்தான் பிரியங்கா. அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை படத்தில் வடிவேலுவுடன் பிரியங்கா நடித்திருந்தார். அந்த சமயத்தில் வடிவேலுவுடன் இவர் கிசுகிசுக்கபட்ட நிலையில் மார்க்கெட்டை இழந்துவிட்டார்.

Also Read : நானும் நடிகன்-டா என கண்ணீர் வரவழைத்த வடிவேலுவின் 6 படங்கள்.. சீரியஸாக நடித்து ரீ என்ட்ரியில் ஜெயித்த மாமன்னன்

யாமினி ஷர்மா : அக்கட தேசத்து நடிகையான யாமினி ஷர்மா வடிவேலுவின் இந்திரலோகத்தில் நான் அழகப்பா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த ஒரு படத்தில் தான் அவர் வாய்ப்பை பெற்றாலும் அதன் பிறகு தமிழ் சினிமாவே வேண்டாம் என்று ஓடி விட்டாராம். இதற்குக் காரணம் வடிவேலு தான் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

மின்னல் தீபா : இப்போது சின்னத்திரை தொடர்களில் ஒரு ரவுண்ட் வருபவர்தான் மின்னல் தீபா. இவர் மாயி படத்தில் வாம்மா மின்னல் என்ற கேரக்டரில் நடித்ததால் மின்னல் தீபா என்ற பெயரை பெற்றார். அந்த படத்தில் வடிவேலு தீபாவிடம் ஒன்றை கண்ணு போல் நடி என்று கூறினாராம். அந்த படத்தில் நன்றாக நடித்தும் நிஜமாகவே இவருக்கு கண்ணு இப்படி தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்ட இயக்குனர்கள் வாய்ப்பு கொடுக்க வில்லையாம்.

Also Read : சிம்பு இடத்தை பிடித்த வைகைப்புயல் வடிவேலு. . மாமன்னன் படத்தால் அடித்த ஜாக்பாட்

மோனிகா : குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து வந்த மோனிகா இரண்டாம் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் வடிவேலுவின் கட்டாயத்தின் பேரில் 23ஆம் புலிகேசி படத்தில் மோனிகா நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு வடிவேலுவுடன் நடிக்கவே கூடாது என்ற முடிவை மோனிகா எடுத்துவிட்டாராம்.

ஸ்ரேயா : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சிவாஜி படத்தில் நடித்த ஸ்ரேயா இந்திரலோகத்தில் நான் அழகப்பா படத்தில் வடிவேலுவுடன் நடனம் ஆடு இருந்தார். முன்னணி ஹீரோயின் நகைச்சுவை நடிகருடன் நடனம் ஆடியதால் ஸ்ரேயா அப்போது மார்க்கெட்டை இழந்தார். இதற்கும் வடிவேலு தான் முக்கிய காரணம்.

சொர்ணா மேத்யூ : ஆரம்பத்தில் கதாநாயகிகளின் தோழியாக நடித்த இவர் விவேக்கின் படங்களில் நிறைய நடிக்க தொடங்கினார். ஆனால் சம்பளம் குறைவாக வாங்கிக் கொண்டிருந்த நிலையில் வடிவேலுவிடம் வாய்ப்பு கேட்டு சென்றார். அப்போது சந்திரமுகி வாய்ப்பை வடிவேலு சொர்ணா மேத்யூக்கு கொடுத்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் சம்பளமும் அதிகம் வாங்கிக் கொடுத்தாராம். இதை மேத்யூ பல இடங்களில் கூறியிருக்கிறார்.

Also Read : சக நடிகரை தற்கொலைக்குத் தூண்டிய வடிவேலு.. நாளுக்கு நாள் எகிறும் மாமன்னனின் க்ரைம் லிஸ்ட்

- Advertisement -

Trending News