ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பெண்களே வெறுக்கும் அளவிற்கு நடந்து கொண்ட 6 நடிகைகள்.. குஷ்புக்கு போட்ட செருப்பு மாலை

அமலா பால்: இன்றுவரை வளர முடியாமல் போனதற்கு இவருடைய கேரக்டரும் ஒரு காரணமாக இருக்கலாம். கல்யாணத்துக்கு பிறகும் பார்ட்டி, பப் என சுற்றி திரிந்து வந்தார். இதனால் அவரது இல்லற வாழ்க்கை நாசமாய் போனது. ஆரம்பத்தில் இவர் நடித்த சிந்து சமவெளி படத்துக்கு எல்லா பக்கமும்எதிர்ப்பு கிளம்பியது. மாமனார், மருமகள் கள்ள உறவை பற்றிய கதை என்பதால் ஒட்டுமொத்த மாதர் சங்கமும் இவருக்கு எதிராக போர் கொடி தூக்கியது.

சங்கீதா: பின்னணி பாடகர் க்ரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர்,ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. உயிர் என்ற படத்தில் கணவரின் தம்பி மீது ஆசைப்பட்டு அவரை அடைய விரும்புவார். இந்த படத்தில் நடித்ததால் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குஷ்பூ: பெண்கள் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வதில் எந்த ஒரு தப்பும் கிடையாது என்று பகிரங்கமாக ஒரு பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்டார். தமிழ் கலாச்சாரத்துக்கே இது ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று அவர் படத்திற்கு செருப்பு மாலையும், உருவ பொம்மை எரித்தும் எதிர்ப்பு காட்டினார்.

ஓவியா: பிக் பாஸில் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர் ஓவியா. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாலும் இருந்து வந்தது. ஆனால் அடுத்தடுத்து அவர் நடந்து கொண்ட விதம் இவரது ஒட்டுமொத்த பெயரையும் அழித்து அவரை பெண்கள் மத்தியில் ஒரு வெறுக்கத்தக்க நபராக மாற்றியது. ஓவியா டபுள் மீனிங் வசனம் நிறைந்த ஆபாசமான படங்களில் நடித்து தன் கேரியரை கெடுத்து கொண்டார்.

ரெஜினா கசான்றா: தமிழில் நல்ல ஹோம்லி நடிகையாக வலம் வந்தவர் திடீரென தெலுங்கு படங்களில் ஓவர் கிளாமர் ஆக்ட்ரஸ் ஆக மாறிவிட்டார். அது மட்டும் இன்றி இவர் கலந்து கொள்ளும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படு கவர்ச்சியாக வருவது இவரது வழக்கம். தெலுங்குவில் “எவரு” என்ற ஒரு படத்தில் பெட்ரூம் காட்சிகளில் நடித்து தன் பெயரைக் கெடுத்துக் கொண்டார்.

ஆண்ட்ரியா: ஆரம்பத்தில் இவர் கேரியர் அனைவரும் போற்றும் படி இருந்தது. பல திறமைகளை கொண்டவர், நன்றாக பாடுவார் என்றெல்லாம் இவருக்கு பெயர் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து இவர் ஆபாச படங்களில் நிறைய தலை காட்ட ஆரம்பித்து விட்டார். அவள், வடசென்னை போன்ற படங்களில் இவர் மிகவும் கிளாமராக நடித்து தன் பெயரை கெடுத்துக் கொண்டார்

- Advertisement -

Trending News