கமலுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்.. காதலனுக்காக இலவுகாத்த கிளியாக காத்திருக்கும் 50 வயது நடிகை

Actor Kamal: அந்த காலகட்டத்தில் கமலுடன் நடிக்க ஒரு படத்திலாவது வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகைகள் ஏங்கியது உண்டு. ஆனால் நதியா போன்ற சில நடிகைகள் கமலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டனர். அதேபோல் தான் ஒரு நடிகை கமலுடன் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை பயில்வான் கூறியிருக்கிறார்.

அந்த நடிகை 50 வயதை கடந்தும் இலவுகாத்த கிளியாக தனது காதலனை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியிருக்கிறார். பொதுவாக பயில்வான் ரங்கநாதன் பல நடிகைகளை பற்றி தனது யூடியூப்பில் பேசியிருக்கிறார். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கனகா பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

Also Read : கமல் போல் பல கெட்டப்புகளை போட்டு நடித்த அஜித்தின் 5 படங்கள்.. கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்த ஒரு கேரக்டர்

அதாவது 90 காலகட்டத்தில் டாப் நடிகர்களுடன் நடித்து வந்த கனகா கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. இதுக்கு காரணம் கமலுடன் நடிக்க கூடாது என கனகாவின் அம்மா கூறியிருந்தாராம். ஆகையால் ஒரு முறை கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதை கனகா மறுத்துவிட்டார் என அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் கனகா சினிமாவில் உள்ள போதே ஒருவருடன் வாழ்ந்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கனகாவின் காதலன் திடீரென வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். கனகா ஒரு பங்களாவில் உதவியாளர்களின் கவனத்தில் இருந்து வருகிறாராம்.

Also Read : அடுத்த சார்லி சாப்ளின் இவர்தான்.. நடிப்பை பார்த்து உறைந்து போய் கமல் கொடுத்த பட்டம்

திரை மறைவில் இருக்கும் கனகாவை யார் பேட்டி எடுக்க சென்றாலும் அனுமதிக்க மாட்டாராம். சமீபத்தில் கூட அவரது வீடு தீப்பிடித்த நிலையில் இதில் சில பிரச்சனைகளையும் ஏற்பட்டிருந்ததாம். தீயணைப்பு துறையினரிடம் கனகா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக பயில்வான் கூறியிருக்கிறார்.

தனது காதலன் மீண்டும் தன்னை பார்க்க வருவார் என்று மனம் பித்து பிடித்தவர் போல் கனகா இருக்கிறாராம். தனது கண்ணசைவால் ரசிகர்களை கட்டிப்போட்ட இவருக்காக இப்படி ஒரு நிலைமை என பலரும் பரிதாபப்படுகிறார்கள். இப்போதே நடிகைக்கு 50 வயது ஆன நிலையில் இனியா அவரது காதலர் வரப்போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.

Also Read : 4 வாரிசு நடிகர்களை டார்கெட் செய்யும் கமல்.. ராஜ் கமலுக்கு ஃபிலிம்ஸ்-க்கு வந்த பெரிய இடத்து தூது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்