கொரியன் படத்தை ரீமேக் செய்து மொக்கை வாங்கிய 5 தமிழ் படங்கள்.. சரத்குமார் டெபாசிட் இழந்த படம்

நல்ல கதை கொண்ட படத்தை பிற மொழியில் ரீமேக் செய்து வெற்றி காண்பது வழக்கம். அவ்வாறு ரீமிக் செய்த கொரியன் படங்கள் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.

ஆனால் அதே கதையை ரீமிக்ஸ் செய்து, அக்கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு நடிக்காமல் அவை தோல்வியையும் சந்திக்க நேரிடுகிறது. அவ்வாறு கொரியன் படத்தை ரீமேக் செய்து மொக்கை வாங்கிய 5 தமிழ் படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: விஜய்யை சந்திக்க கேரவனுக்கு வெளியில் காத்திருந்த அஜித்.. பதட்டத்தில் தளபதி என்ன சொன்னார் தெரியுமா.?

இது என்ன மாயம்: ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் இது என்ன மாயம். இப்படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சைரன் ஏஜென்சி என்ற கொரியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு படும் தோல்வியை சந்தித்தது. மேலும் இப்படத்தை சரத்குமார் தயாரித்து பெரும் இழப்பை சந்தித்தார்.

மூடர் கூடம்: நவீன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் அட்டாக் தி கேஸ் ஸ்டேஷன் என்னும் கொரியன் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் ஓவியா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் நேர்மறை விமர்சனங்களை பெற்றது இருப்பினும் வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை.

Also Read: இடுப்பு தெரிஞ்சா கை வைக்க தான் செய்வாங்க.. பயில்வானுக்கு கன்டென்ட் கொடுத்த ரேகா நாயர்

செக்க சிவந்த வானம்: மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிலம்பரசன், அருண் விஜய், ஜோதிகா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தன் தந்தையின் இடத்தை பிடிக்க மூன்று சகோதரர்களிடையே ஏற்படும் போராட்டத்தை வெளிக்காட்டும் படமாய் அமைந்த இப்படம் நியூ வேர்ல்ட் என்னும் கொரியன் பட ரீமேக் ஆகும்.

புலிவால்: ஜி மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த இப்படம் ஹண்ட் போன் என்னும் கொரியன் பட ரீமேக் ஆகும். இப்படத்தின் வெற்றியை கண்டு தமிழில் தயாரிப்பை மேற்கொண்டார் சரத்குமார். மேலும் இப்படத்தில் பிரசன்னா, விமல், ஓவியா ஆகியோர் நடித்திருப்பார்கள். ஆனால் அதில் கிடைத்த வெற்றியை காட்டிலும் இப்படம் தமிழில் மொக்கை அடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

Also Read: கௌதமி கமலுடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. துணிச்சலுடன் சர்வ சாதாரணமாக நடித்த அந்தப் படம்

காதலும் கடந்து போகும்: மை டியர் டெஸ்பராடோ என்னும் கொரியன் படத்தின் ரீமேக் ஆன இப்படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கொரியன் மொழியில் காதல் படமாய் நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தமிழில் படும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -spot_img

Trending News