ரப்பர் மனிதனைப் போல் பிரபுதேவா ஆடிய 5 பாடல்கள்.. ஆட்டத்தை பார்த்து மிரண்டு ஹீரோவாக்கிய ஷங்கர்

தமிழ் சினிமாவில் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் தான் பிரபுதேவா. அதிலும் இவருடைய நடனத்திற்கு ஈடாக யாராலும் ஆட முடியாது என்ற அளவிற்கு தனது பங்களிப்பை முழுமையாக கொடுக்கக் கூடியவர் ஆவார். அப்படியாக தனது நடனத்தின் மூலம் ரப்பர் மனிதனைப் போல் வளைந்து ஆடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதனை அடுத்து அவை என்னென்ன பாடல்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

சின்ன ராசாவே: பி வாசு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “சின்ன ராசாவே” என்னும் பாடலில் சுகன்யா உடன் இணைந்து பிரபுதேவா நடனத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.

Also Read: 60 படங்களில் நடித்தும் பிரோஜனம் இல்லை.. இந்த 6 படங்களை மட்டுமே ஹிட் கொடுத்த பிரபுதேவா!

முக்காலா முக்காப்புலா: சங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளியான திரைப்படம் காதலன். மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அதிலும் இப்படத்தில் வரும் “முக்காலா முக்காப்புலா” என்னும் பாடலில் பிரபுதேவா ரப்பர் மனிதனாகவே மாறி இருப்பார். அந்த அளவிற்கு இந்தப் பாடலில் மைக்கேல் ஜாக்சனுக்கே டப் கொடுக்கும் விதத்தில் நடனம் ஆடி அசத்தி இருப்பார்.

சிக்கு புக்கு ரயிலு: 1993 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் ஜென்டில்மேன். மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு” என்னும் பாடலில் பிரபுதேவா, கௌதமி உடன் இணைந்து நடனத்தில் தெறிக்க விட்டிருப்பார். இந்தப் பாடலால் கவரப்பட்ட ஷங்கர் காதலன் படத்தில் பிரபுதேவாவை ஹீரோவாக்கினார்.

Also Read: செல்வராகன் நடிக்க கூப்பிட்டு வர மறுத்த பிரபுதேவா.. மிஸ் பண்ணிட்டோமேன்னு இப்பவும் புலம்பும் சூப்பர் ஹிட் படம்.!

பேட்டராப்: காதலன் படத்தில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “பேட்டராப்” என்னும் பாடலில் பிரபுதேவா இறங்கி குத்தி இருப்பார். அதிலும் வைகைப்புயல் வடிவேலு உடன் நடன புயல் பிரபுதேவாவின் குத்தாட்டம் இன்று வரையிலும் ரசிகர்களுக்கு பிரியமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

காசு மேல காசு வந்து: சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலா காதலா. இதில் கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள “காசு மேல காசு வந்து” என்னும் பாடலில்  உலகநாயகனுடன் பிரபுதேவா நடனத்தில் பிச்சு உதறி இருப்பார்.

Also Read: ஓநாய்களின் நடுவே பிரபுதேவா.. பயமுறுத்தும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்