Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓநாய்களின் நடுவே பிரபுதேவா.. பயமுறுத்தும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள வுல்ஃப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடன இயக்குனர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபுதேவா தற்போது கைவசம் இரண்டு, மூன்று படங்கள் வைத்துள்ளார். அதில் ஒன்று தான் வுல்ஃப்.
வினு வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் வுல்ஃப் படத்தில் ராய் லட்சுமி, பரத்வாஜ், ஆர் ஜே ரமேஷ் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படம் அறிவியல் சம்பந்தமான திகில் நிறைந்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
Also Read : டான்ஸ் ஆடியே மார்க்கெட்டை பிடித்த 5 ஹீரோக்கள்.. உச்சத்தை தொட்டு பார்த்த பிரபுதேவா
அதில் ஓநாய்களின் நடுவே ஓநாய் போல பிரபுதேவா உள்ளார். அதாவது வுல்ஃப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இருவருமே ஓநாயின் குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் படத்தின் இறுதியில் எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பது தான் வுல்ஃப் படத்தின் மையக்கதை.
இதேபோல் மனிதர்கள் ஓநாய் குணாதிசயங்கள் உடன் இருக்கும் படங்கள் ஹாலிவுட் வெளியாகி உள்ளது. ஆனால் இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் புதிய கதைக்களமாக இருக்கும். மேலும் வினு வெங்கடேஷ் இந்த படத்தை சிறப்பாக கையாண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது.
Also Read : விஷாலின் பேராசையால் எல்லாம் மண்ணா போச்சு.. பிரபுதேவாவுக்கு செய்த துரோகம்
வுல்ஃப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் மார்ச் மாதம் படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் விரைவில் வுல்ஃப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிப்பார்கள். மேலும் இந்த படத்தின் மீது பிரபுதேவா முழு நம்பிக்கை வைத்துள்ளாராம். கண்டிப்பாக அவருடைய திரை வாழ்க்கையில் வுல்ஃப் படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவரது ரசிகர்களால் பேசப்பட்ட வருகிறது.

wolf-Prabhu-deva
Also Read : நக்மாவை நடுரோட்டில் கழட்டிவிட்ட பிரபுதேவா.. மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்
