போதையை கருவாக வைத்து வெளிவந்த பிரபலமான 5 படம்.. சங்கடத்தில் தவித்து வரும் லோகேஷ்

Tamil popular films: மொளச்சு மூணு இலை விடாததெல்லாம் இப்போது கஞ்சா, சிகரெட், தண்ணி அடிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் சமீப காலத்தில் டாப் ஹீரோக்களும் தங்களுடைய படங்களில் இவற்றை ஆதரிப்பது தான். அதிலும் போதையை கருவாக வைத்து எடுத்த ஐந்து படங்கள் சமீபத்தில் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இதனாலே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போது தர்ம சங்கடத்தில் இருக்கிறார்.

லியோ: லோகேஷ் தன்னுடைய எல்சியு கான்செப்டில் தளபதி விஜய்யை வைத்து எடுத்த படம் தான் லியோ. இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டாலும் இதில் விஜய் கஞ்சா ஃபேக்டரியின் தளபதியாகவே இருந்தார். இந்த படம் முழுக்க கஞ்சா புகை தான் அதிகம் வீசியது. நிறைய நல்ல விஷயங்களை விஜய் தன்னுடைய நடிப்பின் மூலம் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கலாம். அவர் என்ன செய்தாலும் அதை அப்படியே பைத்தியக்காரத்தனமாக செய்கிற ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் கஞ்சா ஃபேக்டரியின் தலைவனாக இந்த படத்தில் யோசிக்காமல் நடித்ததற்கு எதிராக பலரும் குரல் கொடுத்தனர். ஆனால் அது அந்தப் படத்திற்குரிய கதாபாத்திரம் என்று பூசி மொழுகி விட்டனர்.

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த படம் தான் விக்ரம். இந்தப் படத்தில் விக்ரம் போதைப் பொருள் கடத்தல் கும்பலை வேரறுப்பது தான் படத்தின் கதை. இதற்காக அவருடைய மகனை இழந்தாலும், அந்த போதை பொருள் கடத்தல் கும்பலை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று, இந்த படம் முழுக்கவே கொலையும், பழிவாங்குதலுமாய் தான் இருக்கும்.

கைதி: மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் அவரை ஒரு டாப் இயக்குனராக நிலை நிறுத்தியது. இந்த படத்தில் கைதியாக கார்த்தி நடித்தார். ஆனால் ஒரு பெரிய போதை கும்பலை கொத்தாய் பிடிப்பது தான் இந்த படத்தின் கதை. கைதியான கார்த்தி அந்த கும்பலை காவல் நிலையத்திலேயே தீர்த்து கட்டி விடுவார். ஆனால் இந்த படத்தின் மையக்கருவே போதைப் பொருள்தான்.

Also Read: எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் கோட் படக்குழு.. விஜய்யை மெர்சல் ஆக்கிய வெங்கட் பிரபு

அயன்: சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்தை பார்த்த பிறகு தான் பாமர மக்களுக்கு போதை பொருளை இப்படியெல்லாம் கடத்த முடியுமா என ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அதே போதைப் பொருள் எங்கெங்கெல்லாம் கிடைக்கும், எப்படி எல்லாம் அதை பயன்படுத்தலாம் என்பதையும் இந்த படத்தின் மூலம் இளசுகளுக்கு காட்டி விட்டனர்.

தர்பார்: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தின் மையக்கருவே போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிப்பதுதான். இதில் மும்பை போலீஸ் கமிஷனர் ஆக செம கெத்துடன் என்ட்ரி கொடுத்த ரஜினி, போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை வேரறுத்தார். ஆனால் இதில் இளைஞர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை கெத்தாக காட்டியது தான் தவறு.

தற்போது புதுச்சேரியில் 9 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணம் அந்த கொடுமையை செய்தவர்கள் கஞ்சா போதையில் இருந்ததுதான். அவர்களுடைய வயது வெறும் 19 தான். இந்த சம்பவத்தை குறித்து ‘இது ரொம்ப பெரிய தப்பு’ என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள் கமல் மற்றும் விஜய். ஆனால் முதலில் இது போன்ற படங்களில் நடிக்காமல் இருங்கள், அப்புறம் வந்து பேசுங்கள் என்று சோசியல் மீடியாவில் சமூக ஆர்வலர்கள் அவர்களை திட்டி வருகிறார்கள்.

Also Read: லால் சலாம் தோல்விக்கு அப்பா தான் காரணம்.. பகடைக்காயாய் உருட்டிய ஐஸ்வர்யா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்