லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் 5 அக்கட தேசத்து டாப் ஹீரோக்கள்.. விடாமல் இழுத்துபிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார்

Director Lokesh Kanagaraj: கோலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கினாலும் எடுக்கிற படம் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது. இதனால் வெகு சீக்கிரமே அசுர வளர்ச்சி அடைந்த இளம் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என அக்கட தேசத்து 5 டாப் நடிகர்கள், அவரை ஸ்கெட்ச் போட்டு தூக்க பார்க்கின்றனர்.

அல்லு அர்ஜுன்: புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாக மாறிய அல்லு அர்ஜுனுக்கு விக்ரம் படத்தை பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஒரு படமாவது பண்ணி விட வேண்டும் என்ற முடிவில் அவரை அணுகி இருக்கிறார். லோகேஷும் அல்லு அர்ஜுனுக்கு ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார். புஷ்பா 2 படத்தின் ரிலீசுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ்- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தை குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர்: கோலிவுட்டில் வெறும் நான்கே படம் இயக்கினாலும் லோகேஷ் கனகராஜின் படங்கள் எல்லாம் ரொம்பவே வித்தியாசமாக இருப்பதால் ஜூனியர் என்டிஆர் விரைவில் அவருடைய படத்தில் நடிக்க வேண்டும் என தூது அனுப்பி இருக்கிறார். தற்போது லியோ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் லோகேஷ் விரைவில் ஜூனியர் என்டிஆர்-க்கும் கதை ரெடி பண்ண போகிறாராம்.

Also Read: வெளியில் கசிந்த லோகேஷ் ரஜினி பட அப்டேட்.. தலைவர் கொடுத்த செம ஐடியா

மகேஷ் பாபு: லோகேஷ் கனகராஜ் இயக்கிய உலக நாயகனின் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்ற லோகேஷை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சந்தித்திருக்கிறார். அப்போது ஒரு மணி நேரம் இருவரும் உரையாடி இருக்கின்றனர். அந்த சமயம் மகேஷ் பாபு லோகேஷ் இயக்கத்தில் ஒரு படம் பண்ண விருப்பம் தெரிவித்திருக்கிறார். கூடிய விரைவில் லோகேஷ்- மகேஷ் பாபு கூட்டணியும் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பவன் கல்யாண்: டோலிவுட்டின் பவர் ஸ்டார் ஆன பவன் கல்யாண் தற்போது ’ப்ரோ’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதில் அவரது மருமகன் சாய் தரம் தேஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பவன் கல்யாணின் அடுத்த படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார் என்ற செய்தி, சோசியல் மீடியாவில் சமீபத்தில் பரவியது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதேசமயம் பவன் கல்யாண் லோகேஷ் இயக்கத்தில் படம் பண்ண ஆர்வத்துடன் இருக்கிறார்.

Also Read: கன்னட நடிகரை கொக்கி போட்டு இழுக்கும் லோகேஷ்.. கமுக்கமாக கட்டளை போட்ட ரஜினி

இவ்வாறு இந்த ஐந்து தெலுங்கு நடிகர்கள்தான் லோகேஷ் கனகராஜை டோலிவுட்டிற்கு அலேக்காக தூக்க ஸ்கெட்ச் போட்டிருக்கின்றனர். ஆனால் ரஜினி இப்போது ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் இணைய போகிறார்.

ஓரிரு மாதத்தில் இந்த படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு அடுத்ததாக தலைவர் 171-வது படத்தை லோகேஷ் இயக்கப் போகிறார். இந்த படம் தான் ரஜினியின் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் இந்த படத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் லோகேஷ் சிறப்பாக செய்ய வேண்டும் என அவரை அக்கட தேசத்திற்கு விடாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இழுத்து பிடித்து வைத்திருக்கிறார்.

Also Read: பாபாவுக்கு பின் ரஜினி செய்யாத விஷயம்.. சூப்பர் ஸ்டார் பெயரைக் கெடுத்த விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்