மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் ஜெயித்த 5 ஹீரோக்கள்.. கதை தேர்வில் தனித்துவம் காட்டும் விக்ரம்

Tamil heroes: சினிமாவில் நடிகர்கள் சிலர் தனது தனித்துவமான நடிப்பினால் பெரிய அளவு பேசப்படுவார்கள். சில படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தையே உருவாக்குவார்கள். அப்படி உசுர கொடுத்து பயங்கர ஹெவி பெர்பார்மன்ஸ் கொடுத்து நடித்து, வெளிவந்த 5 ஹீரோக்களின் படங்களை பார்ப்போம்.

விக்ரம்: என் காதல் என் கண்மணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் தான் விக்ரம். எப்பொழுதுமே இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மற்றவர்களை காட்டிலும் சிறிது வேறுபட்டு இருக்கும். எடுத்துக்காட்டு அன்னியன், ராவணன், தெய்வத்திருமகள், பிதாமகன் போன்றவை. முக்கியமாக சேது , தெய்வத்திருமகள் திரைப்படத்லும் மாநில பாதிக்கப்பட்டவராக நடித்து தூள் கிளப்பி இருப்பார்.

Also Read: கமல் படத்திற்கு வந்த தடை.. சதியை உடைத்து மண்டியிட வைத்த உலகநாயகன்

பரத்: இந்த வரிசையில் பரத்துடன் காதல் திரைப்படமும் இடம்பெறும். காதலுக்காக சந்திக்கும் போராட்டங்களும், சவால்களையும், தனது எதார்த்தமான நடிப்பில் வெளிக்கொண்டு வந்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு இவருடைய பெயர் காதல் பரத் என்னும் அளவிற்கு ஒரு பெரிய அடையாளத்தை உண்டாக்கிய திரைப்படம் ஆகும்.

தனுஷ்: தற்போது பீக்கில் இருக்கும் நடிகர்களுள் ஒருவரான தனுஷும், தனது வேற லெவல் ஆக்டிங் வெளிக்கொண்டு வந்த திரைப்படம் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன். வெறித்தனமான காதலை மனதுக்குள் புதைத்து வைத்திருக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தனுஷ்.

Also Read: எப்படியாச்சும் ஜெயிலர் பட வசூலை முந்திடனும்.. விக்ரமிடம் மண்டியிட்டு லியோ பட குழு செய்த நரி தந்திரம்

கமல்: கமல்ஹாசன் தனித்துவமான நடிப்பினால் தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கிறார். அந்த வரிசையில் இவரின் ஆளவந்தான் திரைப்படமும் ஒன்றாகும். இதில் ஒரு கமல் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிறுவயதில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பினால் பெண்களை பழி வாங்கும் அரக்கன் கேரக்டர் இவருக்கு

மிஷ்கின்: இந்த வரிசையில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நபர் தான் இயக்குனர் மிஷ்கின். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான நந்தலாலா திரைப்படத்தில் மன இறுக்கம் கொண்ட நபராக, குழந்தை கடத்தல் கும்பல் இடம் இருந்து போராடும் விதம்,  ரசிகர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்து இருக்கும்.

Also Read: செப்டம்பர் 22 குறிவைத்து வெளியாகும் 7 படங்கள்.. மறைந்தும் மகிழ்விக்க வரும் மாரிமுத்துவின் உலகம்மை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்