திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

செப்டம்பர் 22 குறிவைத்து வெளியாகும் 7 படங்கள்.. மறைந்தும் மகிழ்விக்க வரும் மாரிமுத்துவின் உலகம்மை

September 22 Released Movies: பொதுவாக வெள்ளிக்கிழமை திரையரங்கு மற்றும் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 22ஐ குறி வைத்து திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். தமிழைப் பொறுத்தவரையில் இந்த வாரம் ஓடிடியில் டைனோசர் என்ற ஒரு படம் மட்டும் தான் வெளியாகிறது.

அதுவும் அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய இரண்டு தளங்களில் டைனோசர் படம் ரிலீஸ் ஆகிறது. மற்றபடி ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் படங்கள் தான் அதிகம் வெளியாகிறது. ஆனால் திரையரங்குகளில் தமிழ் படங்கள் நிறைய வெளியாகிறது. அந்த வகையில் சிறு பட்ஜெட் படங்கள் ஆன ஐமா, கடத்தல் மற்றும் கெழப்பய போன்ற படங்கள் வெளியாகிறது.

Also Read : மிஸ்கின் கேட்ட கேள்வியால் கடுப்பான மணிரத்தினம்.. எந்த காலத்திலும் இவரின் மூஞ்சில முழிக்கவே மாட்டேன்னு போயிட்டாராம்

இதைத்தொடர்ந்து நடிகர் சச்சின், அபர்ணதி ஆகியோர் நடிப்பில் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் டீமன் படமும் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனராக பல படங்களை கொடுத்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அபிராமி, ரோபோ சங்கர், மிஸ்கின், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர் யூ ஓகே பேபி படமும் வெளியாகிறது.

அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் உலகம்மை. அதாவது சமீபத்தில் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் சின்னத்திரை நடிகர் மட்டுமல்லாமல் ஒரு பன்முகத்தன்மை கொண்டவர்.

Also Read : குணசேகரன் இல்லாத குறையை தீர்க்க வரும் பொம்பள ரவுடி.. எவ்வளவு முடியுமோ உருட்டுங்க நாங்க வெயிட் பண்றோம்

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக சினிமாவில் நுழைந்து அதன் பிறகு இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். இப்போதுதான் நிறைய படங்களில் கமிட்டாகி மாரிமுத்து நடித்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் ரஜினியின் ஜெயிலர் தான்.

மேலும் இந்தியன் 2 போன்ற சில படங்களில் மாரிமுத்து நடித்துள்ள நிலையில் விரைவில் அந்த படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த வகையில் கௌரி கிஷன் நடிப்பில் விஜய் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் உலகம்மை படத்திலும் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படமும் செப்டம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Also Read : வேல ராமமூர்த்திக்கு ஆப்பு அடித்த எதிர்நீச்சல் இயக்குனர்.. குணசேகரன் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்

- Advertisement -

Trending News