எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத 5 படங்கள்.. தனுஷ் நடிப்பில் ரகுவரனாக மாற்றிய படம்

Five Interesting Movie: சினிமாவில் எத்தனையோ படங்கள் மக்களுக்கு பிடித்த மாதிரி அமைந்தாலும், சில படங்கள் தான் திரும்பத் திரும்ப பார்க்க தூண்டும். அதற்கு காரணம் அந்த படங்கள் மக்களின் நிலைமையோடு ஒத்துப் போக கூடிய விஷயங்களாக இருக்கும். அப்படி வந்த சில படங்களில், படித்து முடித்துவிட்டு வேலை தேடி போராடும் இளைஞர்களை மையமாக வைத்து காட்டப்பட்டிருக்கும். இந்த படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே செய்யாது. அப்படிப்பட்ட படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஜனனம்: இயக்குனர் ரமேஷ் செல்வன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ஜனனம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அருண் விஜய்,பிரியங்கா திரிவேதி, ஆசிஷ் வித்யார்த்தி, ரகுவரன் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் அருண் விஜய், சூர்யா என்ற கேரக்டரில் ஒரு கோபமான இளைஞன் வேலை தேடும் பட்டதாரி கேரக்டரில் நடித்திருப்பார். பிறகு இக்கட்டான சூழ்நிலையில் அருண் விஜய்யின் வாழ்க்கை மாறுகிறது. இதன் பிறகு என்னென்ன விஷயங்கள் நடக்கிறது என்பதை மீதமுள்ள கதையாக காட்டப்பட்டு இருக்கும். இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆசை தூண்டும் அளவிற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

Also read: வணங்கான் சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்.. தெறிக்கவிடும் லேட்டஸ்ட் அப்டேட்

சத்யா: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு சத்யா திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், அமலா, ராஜேஷ், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் சமூகத்தில் நடக்கும் அநீதியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு வேலையற்ற இளைஞனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் நாட்டில் நடக்கும் உண்மையான விஷயத்தை கமல் அவருடைய நடிப்பின் மூலம் தத்ரூபமாக காட்டி இருப்பார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று 150 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய அதிக வசூல் சாதனை படைத்த படமாக மாறியது.

வறுமையின் நிறம் சிகப்பு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன், திலீப் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது படித்து முடித்துவிட்டு வேலை தேடும் பட்டதாரிகளின் உண்மையான நிலவரம் என்னவென்று சுட்டிக்காட்டும் விதமாக அமைந்திருக்கும். சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் அவர்கள் படாத பாடு பட்டு வேலைக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை காட்டப்பட்டு இருக்கும். இப்படம் இப்பொழுது பார்த்தால் கூட இது அனைத்தும் உண்மைதான் என்று சொல்லும் அளவிற்கு எதார்த்தமான காட்சியுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

Also read: கமலஹாசன் கூட நடித்ததற்கு செவுலில் பளார் வாங்கிய நடிகை.. அல்ட்ரா மார்டன் ஆக்டரை வச்சு செய்து உலக நாயகன்

நிழல்கள்: பாரதிராஜா இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் நிழல்கள் ரவி, சந்திரசேகர், ஜனகராஜ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வேலையில்லா பட்டதாரிகளாக இருக்கும் இருவர்களின் கஷ்ட காலங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று தமிழ்நாடு மாநிலத்தில் இரண்டு விருதுகளை வென்ற திரைப்படமாக வெற்றி பெற்றது.

வேலையில்லா பட்டதாரி: இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தனுஷ், ரகுவரன் என்ற கேரக்டரில் பல விஷயங்களை செய்திருப்பார். இப்படம் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் பட்டதாரியின் கஷ்டங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி காட்டப்பட்டிருக்கும். இதில் வரக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் பார்ப்பவர்களை சுவாரசியமாக்கி திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் அளவிற்கு எதார்த்தமான காட்சிகளை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Also read: மாலத்தீவில் நடக்காதது ஜெயிலர் ரிலீஸில் நடந்து விட்டதே.. தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்த முத்துவேல் பாண்டியன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்