அம்மாக்களை கொண்டாட வைத்த 6 படங்கள்.. 3 குழந்தைகளுடன் புது அவதாரம் எடுத்த சிம்ரன்

காதல், நட்பு, ஆக்சன் போன்ற படங்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் அம்மா சென்டிமென்ட் படங்களுக்கென ஒரு தனி சிறப்பு இருக்கிறது. அது காலம் கடந்தாலும் ரசிகர்களின் நினைவில் நிற்கும். அப்படி அம்மா சென்டிமென்ட்டை மையப்படுத்தி வெளிவந்த ஐந்து படங்கள் பற்றி இங்கு காண்போம்.

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி: கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நதியா, அசின் நடிப்பில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் மாடர்ன் அம்மாவாக வரும் நதியா தன் மகன் மேல் உயிரையே வைத்திருப்பார். ஒரு கட்டத்தில் அவருடைய இறப்பு அதனால் ஹீரோ படும் துயரம் பற்றிய கதைதான் இப்படம். இதில் வரும் அம்மா பாட்டு இப்போது கேட்டாலும் ரசிக்க வைக்கும்.

ராம்: அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படத்தில் ஜீவா மாறுபட்ட கேரக்டரில் நடித்திருப்பார். அவருடைய அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பு அபாரமாக இருக்கும். தன் மகனுக்காகவே வாழும் அவர் கொலை செய்யப்படுவதும், அதனால் ஜீவா தவிப்பதுமாக கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த வகையில் இப்படத்தில் வரும் ஆராரிராரோ என்ற அம்மா பாட்டு பலரின் ஃபேவரிட்டாக இருக்கிறது.

Also read: வசீகரத்தால் கைவசப்படுத்திய சன்னி லியோனின் 4 படங்கள்.. ஆட்டத்தைப் பார்க்க ஹவுஸ்புல்லான திரையரங்கு

கன்னத்தில் முத்தமிட்டால்: மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிப்பில் இப்படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியானது. இதில் சிம்ரன் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார். அதிலும் முதல் குழந்தையாக வரும் கீர்த்தனா தத்து குழந்தையாக இருப்பார். அதை வைத்து கொண்டு செல்லப்பட்ட இந்த கதை சிம்ரனின் நடிப்பை மாறுபட்ட கோணத்தில் காட்டி இருக்கும்.

36 வயதினிலே: ஜோதிகாவுக்கு சரியான ரீ என்ட்ரியாக அமைந்த இப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதில் இவர் தன் குடும்பத்திற்காகவே வாழும் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் தன்னை விட்டு பிரியும் மகள் மற்றும் கணவனால் வருத்தப்படும் இவர் அவர்கள் பெருமைப்படும் அளவுக்கு மாற வேண்டும் என முயற்சி எடுப்பார். இப்படியாக செல்லும் கதையில் ஜோதிகாவின் நடிப்பு அசத்தலாக இருக்கும்.

Also read: மனோபாலா இறப்பிற்கு முன் நடித்த 6 படங்கள்.. காட்சிகள் இருக்குமா என சந்தேகத்தை கிளப்பிய இந்தியன் 2

பிச்சைக்காரன்: விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது. கோடீஸ்வரனாக இருக்கும் ஹீரோ தன் அம்மாவை காப்பாற்றுவதற்காக பிச்சைக்காரனாக மாறுவார். இப்படி அம்மா சென்டிமென்ட்டில் நகரும் இந்த கதையில் வரும் நூறு சாமிகள் வந்தாலும் என்ற பாடல் இப்போதும் பலரையும் கண்கலங்க வைக்கும்.

அம்மா கணக்கு: 2016ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் அமலா பால் இளம் விதவை தாயாக நடித்திருப்பார். பள்ளிக்கு செல்லும் தன் மகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் இவரும் படிக்க செல்வார். இப்படியாக நகரும் கதையில் அவரின் நடிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஒரு சிறந்த அம்மாவாக அவர் இப்படத்தில் நடித்து காட்டி இருப்பார்.

இவ்வாறு அம்மாவை பெருமைப்படுத்தும் வகையில் நம் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. வருடங்கள் பல கடந்தாலும் இந்த படங்கள் இன்னும் பொக்கிஷமாக தான் பார்க்கப்படுகிறது.

Also read: நடிப்பில் முத்திரை பதித்த மணிகண்டனின் 5 கதாபாத்திரங்கள்.. ராஜாக்கண்ணுவாக வாழ்ந்த கலைஞன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்