2025-ம் ஆண்டு ரேஸ்க்கு தயாரான பெரிய ஹீரோக்களின் 5 படங்கள்.. விஜய் வருவாரா மாட்டாரா.?

5 films ready to race in 2025: ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய படங்களில் எந்த படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறதோ, அந்த படங்கள் தான் வசூல் அளவிலும் லாபத்தை குவித்து விடும். அப்படி இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி இருக்கிறது.

அந்த வகையில் அடுத்த ஆண்டும் ரேஸ்க்கு தயார் என்று பெரிய ஹீரோக்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு உருவாகி வருகிறது. அந்தப் படங்களை தற்போது பார்க்கலாம்.

தலைவர் 171: கடந்தாண்டு ரஜினி, ஜெயிலர் படத்தின் மூலம் தரமான சம்பவத்தை செய்து வசூல் அளவில் லாபத்தை கொடுத்து விட்டார். அதே மாதிரி இந்த ஆண்டும் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் மாபெரும் வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில், அனிருத் இசையில் தலைவர் 171 படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை ஒட்டி ரிலீஸ் ஆகப்போகிறது.

குட் பேட் அக்லி: அஜித் நடித்த துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டு விடாமுயற்சி படம் வருமா வராதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் படம் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை எந்தவித அப்டேட்டும் சரியாக வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இது ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் அவருடைய அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைத்துவிட்டார். அந்த வகையில் இப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக் லைப்: கமலின் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதனை அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் மூன்று கேரக்டரில் கமல் சம்பவம் செய்யப் போகிறார்.

இதற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆன பிறகு தான் தக் லைப் படம் ரிலீஸ் ஆகும். அதனால் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை நாட்களை ஒட்டி வெளிவரும்.

வரிசை கட்டி வரும் சூர்யாவின் படம்

சூர்யா 44: சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் மிரட்டலான நடிப்புடன் உருவாகி வருகிறது. வித்தியாசமான கெட்டப், இதுவரை எடுக்காத முயற்சி என பல பரிமாணங்களில் சூர்யா புது முயற்சியுடன் அதிக ரிஸ்க் எடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளிவந்திருக்கிறது. இதனை அடுத்து சூர்யா அவருடைய 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அந்த வகையில் இப்படம் அடுத்த ஆண்டு ரேசுக்கு தயாராக உள்ளது.

சிம்பு 48: பத்து தல படத்திற்கு சிம்பு இப்பொழுது வரை எந்த படமும் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடவில்லை. ஆனால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் சிம்பு நடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கமல் தற்போது அமரன் படத்தை தயாரிப்பதிலும் தக் லைஃப் படத்தில் நடிப்பதில் பிஸியாக இருப்பதாலும் சிம்புவை கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதெல்லாம் முடித்த பிறகு கமல், சிம்பு கூட்டணியில் STR48 படம் உருவாகப் போகிறது. இதனால் அடுத்த ஆண்டு இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.

இப்படி அடுத்த ஆண்டு திரையரங்குகளில் தூள் கலப்ப பெரிய நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி இருக்கிறது. ஆனால் இதில் விஜய் படம் மட்டும் லிஸ்டில் இல்லாமல் இருக்கிறது. அடுத்த ஆண்டு விஜய் படம் வருமா வராதா என்ற கேள்விக்குரியும் மக்களிடம் இருந்து வருகிறது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்