திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

2023-இல் கல்யாணம் பண்ணிக் கொண்ட 5 பிரபலங்கள்.. பெரிய இடத்து பெண்ணை வளைத்து போட்ட மாப்பிள்ளைகள்

5 Celebrities Got Married This year: கல்யாணம் என்பது சொர்க்கத்தில் தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதில் 100 வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொன்னும் சேர்ந்து வாழணும் என்கிற படி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். மேலும் இந்த ஆண்டு யாருக்கு யார் ஜோடியாகி இல்லற வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

கார்த்திகா நாயர்- ரோகித் மேனன்: 80களில் ஃபேவரிட்ர நடிகையாக வலம் வந்தவர்களில் நடிகை ராதாவும் ஒருவர். இவருக்கு கார்த்திகா மற்றும் துளசி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் கார்த்திகா கோ படத்திலும், துளசி கடல் படத்திலும் தமிழில் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனாலும் தொடர்ந்து இவர்களுக்கு பெருசாக வாய்ப்பு எதுவும் அமையாததால் நடிப்பை கைவிட்டு விட்டார்கள். அதன் பின் ராதா அவருடைய மூத்த மகள் கார்த்திகாவுக்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி ரோஹித் மேனன் என்பவரிடம் கேரளாவில் ஒரு ரெசார்ட்டில் வைத்து மிகப்பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்: நடிகர் அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் சில வருடங்களாகவே காதலித்து வந்தார்கள். அதன்பின் பெற்றோர்களின் சம்மதத்துடன் செப்டம்பர் 13ஆம் தேதி அனைவரும் இவர்களுடைய திருமணத்தைப் பற்றி பேசும் அளவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து தமிழ் கலாச்சாரப்படி நடைபெற்றது.

Also read: லீக்கானது ஜேசன் சஞ்சய்- கவின் படத்தின் ஸ்டோரி.. சூப்பர் ஹிட் படத்தின் காப்பியா.?

கவின்- மோனிகா: பிக் பாஸ் மூலம் பிரபலமான பிறகு கவினுக்கு ஹீரோவாக நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த சமயத்திலேயே இவருடைய திருமண வாழ்க்கைக்கும் போய்விட்டார். அதாவது மோனிகா டேவிட் என்பவரை ஆகஸ்ட் 20ஆம் தேதி கல்யாணம் பண்ணிக் கொண்டார்.

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா: தன்னுடைய குரலாலும், காமெடியான பேச்சாலும் தற்போதைக்கு நகைச்சுவை நடிகராக கோலிவுட்டில் முத்திரை பதித்து வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இதனை தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். இந்த சமயத்தில் சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வரும் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.  இந்த மாதம் 10ம் தேதி மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வைத்து படியே திருமணத்தை நடத்திக் கொண்டார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன்- ஐஸ்வர்யா: மார்க் ஆண்டனி படத்தின் மூலம் சிறந்த இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது இவர் அஜித்துக்கு அடுத்த படத்தை இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் இவருடைய திருமணம் மிக பிரம்மாண்டமான முறையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுடன் இந்த மாதம் 15ம் தேதி நடைபெற்று முடிந்து விட்டது. இயக்குனராக வெற்றி பெற்று வரும் சூழலில் தற்போது பெரிய இடத்து வீட்டுக்கும் மாப்பிள்ளையாக போய்விட்டார். இன்னும் சொல்லப் போனால் சிவாஜி வீட்டு மருமகன் என்கிற அந்தஸ்தையும் பெற்றுக் கொண்டார்.

Also read: 2023ல் எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்த 6 இயக்குனர்கள்.. சிவாஜி பேத்தியவே வளைத்து போட்ட ஆதிக்

- Advertisement -spot_img

Trending News