பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்த 5 நடிகைகள்.. படையப்பா நீலாம்பரியை அடிச்சுக்க ஆளே இல்லை

பெரும்பாலான படங்களில் ஹீரோவுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் சில படங்களில் நடிகைகளும் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவ்வாறு மிக வலுவான கதாபாத்திரங்களில் நடித்த அந்த ஐந்து நடிகைகள் யார் என்பதை பார்க்கலாம்.

நயன்தாரா : நயன்தாரா பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அறம் படத்தில் மதிவதனி என்ற படத்தில் அரசு அதிகாரியாக தனது துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டை வாங்கித் தந்தது.

Also Read : தொடர் கொலை மிரட்டல்.. மனஉளைச்சல், மாரடைப்பு மகளுடன் வெளிநாடு தப்பி சென்ற நயன்தாரா பட முரட்டு வில்லன்

பிரியாமணி : பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்று மிகவும் தைரியமான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்திருந்தார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அந்தப் படத்திற்கு பிரியாமணி தான் சரியான தேர்வு என பலரும் பாராட்டி இருந்தார்கள்.

ஜோதிகா : சில நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களை துணிச்சலாக எடுத்து நடிக்கக் கூடியவர் நடிகை ஜோதிகா. சந்திரமுகி படத்தில் இவரது துர்கா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதேபோல் மொழி படத்தில் காது, கேட்காத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணாக அருமையாக நடித்திருந்தார்.

Also Read : தேசிய விருதுக்கு தயாராகும் ஜோதிகா.. மம்முட்டியுடன் இணையத்தை கலக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ராதா : பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான முதல் மரியாதை படத்தில் குயில் என்ற கதாபாத்திரத்தில் ராதா நடித்திருந்தார். ராதாவின் இந்த கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. குயில் கதாபாத்திரத்திற்கு ராதா முதல் மரியாதை படத்தில் உயிர் கொடுத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

ரம்யா கிருஷ்ணன் : படையப்பா படத்தில் ரஜினியை விட ஒருபடி மேலாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் ரம்யா கிருஷ்ணன். இன்றளவும் நீலாமரியை அடிச்சுக்க ஆளே இல்லை. அதேபோல் ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்திலும் சிவகாமி தேதியாக அசத்தி இருந்தார்.

Also Read : கோர்ட், கேஸ் என்று அலைய முடியாது.. படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட ரம்யா கிருஷ்ணன்

Next Story

- Advertisement -