வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மோசமான கேரக்டரில் நடித்து பெயரை கெடுத்த 5 ஹீரோயின்கள்.. உயிர் சங்கீதாவிடம் சண்டைக்கு சென்ற மாதர் சங்கம்

Heroines Controversial Movies: நடிப்பு என வந்துவிட்டால் சவாலான கேரக்டர்களில் நடிக்கத்தான் வேண்டும். ஆனால் இது சர்ச்சையில் தான் முடியும் என்று தெரிந்து இருந்து சில கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டு மொத்தமாய் டேமேஜ் ஆவதோடு, மார்க்கெட்டையும் இழந்த நடிகைகளும் இருக்கிறார்கள். தைரியமாக கேரக்டர்களை ஏற்று நடிக்கிறேன் என்ற பெயரில் ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டவர்கள் தான் இந்த ஐந்து நடிகைகள்.

அமலா பால்: அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்திலேயே பெரிய சர்ச்சையை கிளப்பியவர். தாலி கட்டிய கணவன் வெளியூர் சென்ற கேப்பில் மாமனாருடன் காதல் ஏற்பட்டு உல்லாசமாக இருக்கும் மருமகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் இழந்த பெயரை மைனா, தெய்வத்திருமகள் போன்ற படங்கள் காப்பாற்றி கொடுத்தாலும் ஆடை படத்தின் மூலம் மீண்டும் தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொண்டார்.

Also Read:சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

ரம்யாகிருஷ்ணன்: ரம்யா கிருஷ்ணன் ஆரம்ப காலத்தில் இருந்தே கொஞ்சம் கிளாமராக நடிக்கும் கதாநாயகி என்பதால், இவர் முதன் முதலில் அம்மன் கேரக்டரில் நடிக்கும்போது பெரிய சர்ச்சை கிளம்பியது. சமீபத்தில் இவர் நடித்து ஹிட்ட அடித்த சூப்பர் டீலக்ஸ் படத்திலும் இவருடைய கேரக்டர் ரசிகர்களால் மோசமான விமர்சனத்தை சந்தித்தது.

சங்கீதா: 90களின் காலகட்டத்தில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த நடிகை சங்கீதாவுக்கு மறு வாய்ப்பாக அமைந்தது தான் பிதாமகன் திரைப்படம். அதை மொத்தமாக சேர்த்து கணவனின் தம்பி மீதுஆசை படுவது போல் உயிர் படத்தில் மொத்தமாய் கேரியரை கெடுத்துக் கொண்டார். தொடர்ந்து இவர் விலைமாதுவாக நடித்த தனம் படமும் பயங்கர விமர்சனத்தை சந்தித்தது.

Also Read:என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே.. டிவின்ஸ் பேபி போட்டோக்களை பதிவிட்ட விக்கி

நயன்தாரா: ஐயா மற்றும் சந்திரமுகி படங்களில் ஹோம்லி லுக்கில் நடித்து 90ஸ் கிட்ஸ் ஆக இருந்த நயன்தாரா வல்லவன் படத்தில் சிம்புவுடன் லிப் லாக் காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு கிளாமர் ரோல்கள் கிடைத்ததால் சுதாரித்துக் கொண்டு அந்த ரூட்டை மாற்றி விட்டார்.

சதா: நடிகை சதா தமிழ் படங்களில் தொடர்ந்து ஹோம்லி லுக்கில் நடித்து நல்ல பெயர் வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த இவர் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன் என்ற பெயரில் டார்ச் லைட் படத்தில் விலைமாதுவாக நடித்து பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

Also Read:காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

- Advertisement -

Trending News