வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

என் முகம் கொண்ட என் உயிரே, என் குணம் கொண்ட என் உலகே.. டிவின்ஸ் பேபி போட்டோக்களை பதிவிட்ட விக்கி

Nayanthara – Vignesh Shivan: இந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய பாடல் வரிகளில் எப்போதுமே வித்தியாசம் காட்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன், மகன்களின் பெயரிலும் வித்தியாசத்தை காட்டி இருந்தார். தன்னுடைய இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இணைந்த இந்த காதல் ஜோடி பல வருட காதலுக்கு பிறகு கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதிலிருந்து குழந்தைகளின் முகங்களை காட்டாமல் ஒரு சில போட்டோக்களை அவர் பதிவிட்டிருக்கிறார்.

Also Read:காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

நடிகை நயன்தாரா சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். தன்னுடைய முதல் பதிவே மகன்களுடன் எடுத்த வீடியோவை தான் பகிர்ந்திருந்தார். இந்த பதிவின் மூலம் தான் முதன் முதலில் தங்களுடைய மகன்களின் முகத்தை இந்த தம்பதி வெளியில் காட்டி இருந்தார்கள். ஒரு வேளை நயன்தாரா தான் தங்களுடைய மகன்களின் முகத்தை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கலாம்.

நயன்தாராவின் அந்த பதிவிற்கு பிறகு விக்னேஷ் சிவனும் தங்களுடைய மகன்களின் புகைப்படங்களை அதிகமாக பதிவிட ஆரம்பித்தார். அதிலும் இன்று தொடர்ந்து நிறைய புகைப்படங்களை ஷேர் செய்து கொண்டிருக்கிறார். பிறந்த குழந்தையிலிருந்து இப்போது வரை உள்ள எல்லா போட்டோக்களையும் விக்கி பதிவிட்டு இருப்பதோடு, பின்னணியில் ஜெயிலர் படத்தின் ரத்தமாரே பாடலையும் சேர்த்து இருக்கிறார்.

Also Read:என் படம் பாக்க குழந்தைகளோடு வராதீங்க! ஏ சர்டிபிகேட் வாங்கிட்டு சப்ப கட்டு கட்டும் ஜெயம் ரவி

இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் தான் எழுதி இருக்கிறார். மேலும் இந்த வரிகள் எல்லாமே தன்னுடைய மகன்களை நினைத்து எழுதியதாக சொல்லியிருந்தார். இப்போது இந்த பாடல் ஒலிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். பலரது செல்போன்களின் ரிங்டோனாக இந்த பாட்டு தான் இருக்கிறது. விக்னேஷ் சிவன் தொடர்ந்து தன்னுடைய பதிவுகளில் சமீப காலமாக இந்த பாடலை தான் பதிவிடுகிறார்.

 

                               நயன் – விக்கி தம்பதி தங்கள் குழந்தைகள் உயிர் மற்றும் உலகத்துடன்

Uyir Ulag
Uyir Ulag

ஜவான் பட ரிலீசுக்கு பிறகு நயன்தாரா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெக்கேஷன் சென்று இருக்கிறார். இது சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் நயன் விக்கி தம்பதி இருவருமே தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். இப்போது அவர்களுடைய குழந்தைகளின் புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது.

- Advertisement -

Trending News