சீரியலுக்கு போனதால் சினிமாவை மறந்த 5 நடிகர்கள்.. 2 படத்தில் சம்பாதிப்பதை ஒரே மாதத்தில் பெறும் குணசேகரன்

5 actors who went to serial and lost the silver screen: சின்ன திரையில் இருந்து கலைஞர்கள் வெள்ளி திரைக்கு போய் ஜொலித்து வரும் நிலையில், நடிகர்கள் சிலர் வாய்ப்பு குறைந்த நிலையிலும் சின்ன திரையில் நடித்தால் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடிக்கலாம் என்கின்ற நப்பாசையில் சின்ன திரையை நோக்கி படையெடுத்து கல்லாகட்டி வருகின்றனர் அவர்களில் 5 நடிகர்களை காணலாம்.

சித்தப்பு சரவணன்: 90 களில் பொண்டாட்டி ராஜ்ஜியம், தாய் மனசு போன்ற படங்களில் மூலம் பிரபலமான சரவணன் சிறிது இடைவேளை விட்டு 2007 இல் பருத்திவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அதன்பின் சில படங்களில் தோன்றியவர் வாய்ப்பற்ற நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின் சமீபத்தில் விஜய் டிவியின் மகாநதி சீரியலில் தோன்றினார் சரவணன்.

மகாநதி சங்கர்: மகாநதி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சங்கர் பாட்ஷா, தீனா போன்ற படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர். ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு குறையவே சன் டிவியின் சீரியல்களில் தலை காட்டிய சங்கர் நாதஸ்வரம், நந்தினி, மாயா போன்ற தொடர்களில் நடித்து உள்ளார். தற்போது வானத்தைப்போல  சீரியலில் நடித்து வருகிறார் மகாநதி சங்கர்.

Also read: கிடைச்ச கேப்பில் கிடா வெட்டிய வேல ராமமூர்த்தி.. குணசேகரன் கேரக்டருக்கு என்ட்ரி கொடுக்கப் போகும் அண்ணன்

வேல ராமமூர்த்தி: எழுத்தாளர் மற்றும் நடிகராக அடையாளப்படுத்திக் கொண்ட வேல ராமமூர்த்தி அவர்கள் மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு பதிலாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனாக நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு நாலு முதல் ஐந்து லட்சம் வரை வாங்கும் வேல ராமமூர்த்தி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 40,000 வாங்கி கல்லா கட்டுகிறார்.

ஸ்ரீ குமார்: ரங்கூன், தெறி, சின்னா, சரோஜா போன்ற படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகுமார் அவர்கள் சின்னத்திரையில் தான் அதிக வாய்ப்புகள் வருவதாகவும் இதன் மூலமே  அதிகமாக பெண்மணிகளின் பேவரைட் ஆக இருக்க முடிகிறது எனவும் தெரிவித்து உள்ளார்.

சஞ்சய்: தமிழ் சினிமாவில் 80களில் கொடி கட்டி பறந்த ஜெய்சங்கரின் மகன் பிரபல தொழிலதிபர் சஞ்சய் சங்கர் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்ன திரையில் பாக்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கும்தொழிலதிபர் அறிமுகமானார். இதனை அந்த சீரியலில் நடித்த செல்வி கேரக்டர்,மீனா செல்லமுத்து அவர்கள் ஜெயசங்கர் கூட நடிக்க முடியாவிட்டாலும் அவரது மகன் கூட இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Also read: அரசியல் ஆடுபுலி ஆட்டத்திற்கு அந்த நாலு எழுத்து சேனலை வாங்கும் விஜய்.. கேட்டாலே சும்மா அதிருதில்ல!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்