3டி தொழில்நுட்பத்தில் உருவான 5 தமிழ் படங்கள்.. அடுத்தடுத்து களமிறங்கும் சூர்யா , சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்படும். அதேபோன்று சில வித்தியாசமான தொழில்நுட்பங்களும் அறிமுகப்படுத்தப்படும். மேக்கப்பில் இருந்து கேமரா நுணுக்கம் வரை வித்தியாசமான டெக்னாலஜியை உபயோகித்து படத்தை வெற்றி பெற செய்வார்கள். அதில் ஒன்றுதான் 3டி தொழில்நுட்பம். இந்த மாதிரி படங்கள் சினிமா ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படுகிறது. தமிழில் இதுவரை ஐந்து 3டி திரைப்படங்கள் உருவாகி இருக்கின்றன.

அம்புலி: தமிழில் முதன் முதலில் வெளியான 3டி தொழில்நுட்ப திரைப்படம் அம்புலி. இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை ஆகும். இந்த படத்தில் நடிகர் பார்த்திபனைத் தவிர மற்ற அனைவருமே புது முகங்களாகத்தான் இருப்பார்கள். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. மனிதனுக்கும் விலங்குக்கும் நடுவில் இருக்கும் அம்புலி என்ற கோரமான உருவத்திடமிருந்து அந்த கிராமத்தை மீட்டுவது தான் இந்த படத்தின் கதை.

Also Read:லியோவுடன் போட்டி போடும் கங்குவா.. சூர்யாவின் மனக்குறையை போக்க படாத பாடுபடும் டீம்

கோச்சடையான்: சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவான திரைப்படம் கோச்சடையான். இந்த படம் ஒரு 3டி திரைப்படம் மட்டுமல்லாது அனிமேஷன் திரைப்படமும் ஆகும். இந்த படத்தில் மறைந்த நடிகர் நாகேஷின் அனிமேஷன் உருவத்தை கூட கொண்டு வந்திருந்தார்கள். படத்தின் கதை நன்றாக இருந்தும் அனிமேஷன் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிது என்பதால் படம் பெரிய வெற்றியை அடையவில்லை.

2.o: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் எந்திரன். அதன் இரண்டாம் பாகமாக ரஜினிகாந்த் அக்சய் குமார் நடிப்பில் 2.o வெளியானது. 3டி தொழில்நுட்பத்துடன் உருவான இந்த படம் கோடிக்கணக்கில் வசூலை அள்ளியது.

Also Read:‘கங்குவா’ என்னன்னு தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த சுடச்சுட அப்டேட்டால் மிரளும் திரையுலகம்

அயலான்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் அயலான். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் இஷா கோபிகர் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கி வரும் இந்த படம் சயின்ஸ் பிக்சன் கதை ஆகும். இதில் சிவகார்த்திகேயன் வேற்றுகிரகவாசியாகவும் நடிக்கிறார். அயலான் திரைப்படம் வரும் நவம்பரில் தியேட்டரில் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது.

கங்குவா: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் சரித்திர திரைப்படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன், திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது.

Also Read:பல கோடிக்கு வியாபாரமான கங்குவா.. ரிலீசுக்கு முன்பே தெறிக்க விட்ட சூர்யா, சிவா கூட்டணி

Next Story

- Advertisement -