ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

தமிழ் படத்தில் இடம் பிடித்த மிரட்டலான 4 ஆங்கில பாடல்கள்.. ஆடுகளத்தில் ஆட்டம் போட்ட தனுஷ்

படத்தில் பாடல்கள் வெற்றி பெறுவது என்பது அப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தரும். அந்த வகையில் படங்களின் பெயரை சொன்னாலே அப்படத்தில் இடம் பெறும் பாட்டு நம் நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு படங்களில் இன்றியமையாமல் வருவதுதான் பாடல்கள்.

படத்தில் கதைக்கேற்ப பாடல்கள் அமைவது என்பது சிறப்பு. மேலும் அக்கதைக்கேற்ப சிச்சுவேஷன் சாங் இருந்தால் அது மக்களின் நெஞ்சில் நீங்காது நிலைத்து விடுகிறது. அவ்வாறு இருப்பின் தமிழ் படங்களில் ஹாலிவுட் ரேஞ்சுற்கு ஆங்கிலத்தில் அமைந்த 5 பாடல்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: விஜய், அஜித்துக்கு இணையாக வசூலை அள்ளிய சூரி.. விடுதலை படத்தின் மொத்த கலெக்ஷன் இதுதான்

ஆடுகளம்: (Warrior come to play) 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், டாப்ஸி ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ஆடுகளம். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் தன் புது முயற்சி ஆக ஒரு பாடலை ஆங்கிலத்தில் இசை அமைத்திருப்பார். அதுவும் இப்படத்தில் இடம்பெறும் கதையின் சூழல் கேட்ப போராளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்த பாடல் மக்களின் வரவேற்பை பெற்றது. இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது என்றே சொல்லலாம்.

ரெமோ: (We were so perfect) 2016ல் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் ரெமோ. இப்படத்தில் அனிருத் தன் முதல் முயற்சியை வெளிக்காட்டி இருப்பார். அதிலும் ஆங்கிலத்தில் இடம் பெரும் இப்பாடல் கேட்பவரை ஈர்க்கும் விதமாக அமைந்தது. மேலும் காதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த இப்பாடல் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Also Read: விஜய்யின் கண்டிஷனால் நொந்து போன வெங்கட் பிரபு.. மொத்த கனவையும் இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களே!

மாஸ்டர்: (Master the Blaster) 2021ல் லோகேஷ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகன் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெறும் இந்த ஆங்கில பாடல் விஜய்யின் பெருமையை உணர்த்தும் விதமாக அமைந்தது. இப்பாடலை அனிருத் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப இசையமைத்துள்ளார். மேலும் இப்பாடலும் மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

விக்ரம்: (Once upon a time) கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் இப்பாடல் இடம் பெற்றிருக்கும். இப்பாடலின் மியூசிக் பெரியதளவு பேசப்பட்டது. அதன்பின் கமலின் ஒவ்வொரு அடிக்கும் ஏற்றவாறு இப்பாடலை இசையமைத்திருப்பார் அனிருத். இப்பாடல் படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்தது. மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இடம் பெற்ற இப்பாடல் மாஸாக அமைந்தது.

Also Read: விஜய்க்காக இறங்கி வந்த பவானி.. ஷாக் மேல் ஷாக் கொடுத்து லோகேஷ் செய்யும் சம்பவம்

- Advertisement -spot_img

Trending News