ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியை இயக்கப்போகும் 3 டைரக்டர்கள்.. படு பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே தனது படத்தை முடித்துவிட்டு தான் அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார். ஆனால் அண்ணாத்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே நெல்சன் உடன் அடுத்த படத்தில் பணியாற்றுவதாக அறிவித்தார். இப்போது ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்த பட டைரக்டர்களை ரஜினி புக் செய்து விட்டார்.

நெல்சன் : பீஸ்ட் படத்தை தொடர்ந்த நெல்சன் ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார். சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளனர்.

Also Read :இளையராஜா அதிகமாக இசையமைத்தது இவர் படத்துக்கு தான்.. ரஜினியை மட்டும் தவிர்த்த இசைஞானி

தேசிங்கு பெரியசாமி : ஜெயிலர் படத்தை தொடர்ந்து தலைவர் 170 படத்தின் வாய்ப்பு இயக்குனர் தேசிய பெரியசாமிக்கு கிடைத்துள்ளது. இவர் தமிழில் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி இருந்தார். இவர் சொன்ன சரித்திர கதை ரஜினிக்கு மிகவும் பிடித்த போனதாம்.

சிபி சக்கரவர்த்தி : டான் படத்தின் மூலம் இயக்குனரான சிபிச் சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார். மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அதிகாரப்பூர்வ இன்னும் சில தினங்களில் வெளியாகலாம்.

Also Read :பௌர்ணமி, அமாவாசை போல் இருந்த மாஸ் கெமிஸ்ட்ரி.. மணிரத்தினத்திடம் கோரிக்கை வைத்த ரஜினி

அட்லி : பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சூழலில் அடுத்ததாக ரஜினி படத்தை அட்லி இயக்கப் போவதாக அரசல் புரசலாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

Also Read :100 கோடியை தாண்டிய கமலின் சம்பளம்.. அதல பாதாளத்திற்கு செல்லும் ரஜினியின் மார்க்கெட்

Next Story

- Advertisement -