25 நாட்கள் வெற்றி நடை போடும் வேட்டையாடு விளையாடு ரீ- ரிலீஸ்.. வசூலை பார்த்து துவங்கும் 2ம் பாகம்

Vettaiyaadu Vilaiyaadu Re-Release Collection Report: 17 வருடத்திற்கு முன் வெளியான படத்தை ரீலீஸ் செய்தாலும் கிங் தான் என்பதை காட்டும் விதமாக உலக நாயகன் கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு படத்தை ரீ- ரிலீஸ் செய்து வசூலை வாரிக் குவித்திருக்கின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமலஹாசன் உடன் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான் வேட்டையாடு விளையாடு.

இந்த படத்தில் டிஜிபி ராகவன் கேரக்டரில் கமல் சிறப்பாக நடித்து மிரட்டி இருந்தார். அதிலும் கமல் இந்த படத்தில்,’ என் கண்ணு வேணும்னு கேட்டியாமே!’ என வில்லன்களை பார்த்து கண்ணை விரித்து காட்டும் காட்சி கொல மாஸாக இருக்கும். இந்த படத்திற்கு ரவி வர்மா ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தது கூடுதல் சிறப்பு.

Also Read: அட இந்தப் படத்தின் கதை தான் விக்ரம் படமா?.. அட்லீயின் லிஸ்டில் சேர்ந்த லோகேஷ் கனகராஜ்

அன்றைய சூழலில் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இந்த படத்தை, மறுபடியும் கடந்த ஜூன் 23ம் தேதி புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்தனர். முதலில் 102 திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது 18 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

25 நாட்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் இதுவரை 1 கோடி வசூலை வாரிக் குவித்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டி இருக்கிறது. சமீபத்தில் ரஜினியின் பாபா படத்தை ரீ- ரிலீஸ் செய்து மொக்கை வாங்கினார்கள். ஆனால் உலக நாயகன் ரீ- ரிலீசிலும் கிங் என காட்டும் விதமாக வேட்டையாடு விளையாடு படம் எதிர்பார்த்ததை விட கூடுதல் வசூலை குவித்திருக்கிறது.

Also Read: கமல் மீது பயங்கர க்ரஷ்.. கதை கூட கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்ட மாவீரன் பட நடிகை

இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் கௌதம் மேனன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மூவரும் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். அது மட்டுமல்ல ரீ-ரிலீசில் வசூலை பார்த்த பிறகு, முன்பு குழப்பத்தில் இருந்த படக்குழு இப்போது தைரியமாக வேட்டையாடு விளையாடு படத்தின் 2ம் பாகத்தை துவங்கும் முடிவில் உறுதியாக இருக்கிறது.

இதற்கான ஸ்கிரிப்ட் வேலையை கௌதம் மேனன் பார்க்கத் தொடங்கி விட்டார். மேலும் உலகநாயகனும் வரிசையாக படங்களில் கமிட் ஆகி இருப்பதால், அவற்றையெல்லாம் பொறுத்து இந்த படத்தை விரைவில் துவங்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

Also Read: 78 வயசு வரை நடித்த ஜாம்பவான்.. 3 தலைமுறைகளை பார்த்த கமல் பட நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்