பாக்யாவை டம்மியாக்கி ஓரம் கட்டி வரும் ராதிகா.. அசிங்கப்பட்டு நிற்கும் பூமர் அங்கிள் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பொறுத்தது போதும் பொங்கி எழுந்திடலாம் என்று ராதிகா நினைத்து விட்டார். அதனால் கோபியின் தில்லாலங்கடி வேலையை நிப்பாட்ட வேண்டும் என்று அவர் செய்யும் சகுனி வேலையை அவ்வப்போது கண்டித்து வருகிறார். அதாவது உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட மாதிரி நல்லா இருந்த அம்மாவையும் பாக்யாவிற்கு எதிராக திருப்பி விட்டார்.

இதெல்லாம் பார்த்த ராதிகா இனி மேலும் கோபியை சும்மா விட்டா வேலைக்காகாது என்று பாக்கியாவிற்கு எதிராக பேசும் போதெல்லாம் அவரை கண்டிக்கிறார். அந்த விதத்தில் பாக்கியா எப்படியாவது பொருட்காட்சி ஆர்டரை கைப்பற்றி விட வேண்டும் என்று போராடி வருகிறார். இதை வீட்டில் இருந்தபடியே கிண்டல் அடித்து அம்மாவிடம் பாக்யா எப்படியும் இதில் தோற்று நிற்க தான் போகிறார்.

வரும்போதே மூஞ்சியை தொங்கப் போட்டுக்கிட்டு கொடுத்த ஒரு லட்ச ரூபாயும் போய்விட்டது என்று பரிதாபமாக வந்து நிற்க போகிறார் என்று கிண்டல் அடித்து அம்மாவிடம் கோபி சொல்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த ராதிகா தாங்க முடியாமல், நிறுத்துங்கள் கோபி அவர்களை பற்றிய தேவையில்லாமல் நீங்க ஏன் கமெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

Also read: மகாநதி சீரியலுக்கு என்ட்ரி கொடுத்த பாக்கியலட்சுமி மருமகள்.. அதிரடியாக விலகிய நடிகை

அவங்க பண்ற விஷயத்துக்கு சப்போர்ட் பண்ண முடியவில்லை என்றாலும், அதை கெடுக்கும் அளவிற்கு பேச வேண்டாம் என்று கோபியை கண்டிக்கிறார். இதை பார்த்த கோபியின் அம்மா, நீ என்னை கட்டின புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாம பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணவில்லை. அதே நேரத்தில் யார் மனதையும் கஷ்டப்படுத்தும் அளவிற்கு பேசக் கூடாது என்பதை தான் சொல்கிறேன் என்கிறார்.

இதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கோபியின் அப்பா, ராதிகாவிடம் தெளிவான மூளையும், புத்திசாலித்தனமும் இருக்கும் பொழுது எப்படிம்மா கோபியை கல்யாணம் பண்ணி உன் வாழ்க்கையை இருட்டாக்கி கொண்டாய் என்று கேட்கிறார். இதற்கு வழக்கம் போல் திருதிருவென்று திருட்டு மொழியுடன் அசிங்கப்பட்டு நிற்கிறார் பூமர் அங்கிள் கோபி.

இதனைத் தொடர்ந்து தற்போது பாக்கியாவை விட அதிகமாக மக்களிடம் ஸ்கோர் செய்து கொண்டு வருவது ராதிகா தான். ஏனென்றால் மனதிற்குள் தப்பு என்று பட்டதும் துணிச்சலுடன் தட்டிக் கேட்கும் கேரக்டர் ராதிகாவிடம் அதிகமாக இருப்பதினால். அந்த வகையில் பாக்யாவை டம்மி ஆக்கி ராதிகா மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார். இப்படியே இருந்தால் இதுவரை எடுத்த கெட்ட பெயர் அனைத்தையும் மாற்றி ராதிகாவிற்கு ஒரு நல்ல இமேஜ் கிடைத்துவிடும்.

Also read: கதிரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய பாண்டியன்.. மீனாவை கழட்டி விட நினைத்த தொடை நடுங்கி