புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்த ஸ்ருதி.. முதல் நாளே மாமியாரை அலற விட்ட மருமகள்

Siragadikka Aasai | 4th to 9th December 2023 – Promo: விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலின் வரும் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி வைரல் ஆகிறது. இதில் காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்ருதி, ஒரு வழியா மாமனார் அண்ணாமலையை சமாதானப்படுத்தி புகுந்த வீட்டிற்குள் நுழைகிறார்.

இவர் காலடி எடுத்து வைத்த பிறகு மாமியார் விஜயாவை அலற விடும் அளவுக்கு தரமான சம்பவத்தை செய்துள்ளார். இதனால் வரும் வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் கலாட்டாவும் கலகலப்பாகவும் இருக்கப்போகிறது. அதிலும் ஸ்ருதி செய்யும் சேட்டை, கொஞ்ச நஞ்சமல்ல. வீட்டிற்குள் நுழைந்ததும் பூஜை அறையில் விளக்கேற்ற சொல்கிறார்கள்.

உடனே அவர், தீக்குச்சியை பற்ற வைக்க கூட தெரியாமல் காமெடி பண்ணுகிறார். உடனே விஜயா அதை வாங்கி பற்ற வைத்து கொடுக்கிறார். உடனே ஸ்ருதி, ‘எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. அதனால் தீக்குச்சியை பற்ற வைக்க தெரியல’ என்று சிரித்துக் கொண்டே செல்கிறார்.

Also read: புகழ்ச்சி எனக்கு வஞ்சம் உனக்கு.. ஆழம் தெரியாமல் காலை விட்ட ஹவுஸ் மேட்ஸ், ரோஸ்ட்டுக்கு தயாரான ஆண்டவர்

சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வார ப்ரோமோ

அதன் பிறகு மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கின்றனர். முதலில் ரவி குடித்துவிட்டு பின் ஸ்ருதியைக் குடிக்க சொல்கின்றனர். ஆனால், ‘அது முடியாது நான் குடித்துவிட்டு பிறகு ரவியிடம் கொடுக்கிறேன்’ என்று சொல்லி, ஸ்ருதி அதை எடுத்து குடித்துவிட்டு பின் ரவிக்கு கொடுக்கிறார்.

இதையெல்லாம் விட, இன்று இரவு சாந்தி முகூர்த்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். உடனே ஸ்ருதி விஜயாவிடம் அதெல்லாம் எப்பயோ நடந்திருச்சே என கேஷுவலாக சொல்கிறார். இதைக் கேட்ட விஜயா அப்படியே ஆடிப் போய் உறைந்து விட்டார். பணக்கார மருமகள் வேண்டும் என்று நினைத்து விஜயாவிற்கு ஸ்ருதி இனிவரும் நாட்களில் சரியான பாடம் புகுந்த போகிறார்.

அதே சமயம் ஸ்ருதியின் அம்மா அண்ணாமலையை பழி வாங்குவதற்காக தன்னுடைய நரி தந்திரமான வேலைகளை செய்யப் போகிறார். ஆனால் இதற்கு ஸ்ருதியை தான் பகடைக்காயாய் பயன்படுத்தப் பார்க்கிறார். இருப்பினும் இந்த வாரம் ஸ்ருதி புகுந்த வீட்டில் செய்கிற அலப்பறை சீரியலை மேலும் விறுவிறுப்பாக்கும்.

Also read: சத்தியத்தை மறந்து கல்யாணம் பண்ணிய செந்தில் மீனா.. பாண்டியன் எடுக்கப் போகும் முடிவு இதுதான்