டாடாவால் எகிறிய மார்க்கெட்.. கவினுக்கு தூண்டில் போடும் 2 ஹீரோயின்கள்

Actor Kavin: சின்னத்திரை பிரபலமாக இருந்த கவின் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு இளம் ஹீரோவாக மாறி இருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த லிப்ட் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த டாடா படமும் இவருடைய மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறது.

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே அப்பா கதாபாத்திரத்தை ஏற்று நடித்த கவின் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஏற்கனவே அவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாகத்தான் இருக்கும். அதில் டாடா படத்தின் வெற்றி அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது.

Also read: லவ் டுடே படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற இவானா.. விளம்பரத்தில் நடிக்க 4 கோடி சம்பளமா?

அந்த வகையில் அவர் இப்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது இரு படங்களில் நடித்து வரும் கவின் இன்னும் சில படங்களையும் ஓகே செய்யும் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். இந்த சூழலில் இவருடன் இணைந்து நடிப்பதற்கு இரண்டு இளம் ஹீரோயின்கள் போட்டி போட்டு வலை வீசி வருகிறார்கள்.

அதில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கும் இவானா தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் எல் ஜி எம், கள்வன், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார்.

Also read: தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா.. காட்டுத்தீயாக பரவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில் தமிழில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அவர் அதற்காக தேர்ந்தெடுத்து இருக்கும் ஹீரோ தான் கவின். எப்படியாவது இவருடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று பிளான் போடும் இவானா அதற்கான வேலைகளில் இப்போது மும்முரமாக இருக்கிறாராம்.

இவரைப் போலவே பேச்சுலர் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த திவ்யா பாரதியும் கவினுடன் இணைய தூண்டில் போட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் சில இளம் நடிகைகளும் கவின் உடன் ஜோடி சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படி இளம் நடிகைகளின் நாயகனாக கவின் மாறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also read: கவின் படத்திற்கு போடப்பட்ட பூஜை.. இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்

Next Story

- Advertisement -