கவின் படத்திற்கு போடப்பட்ட பூஜை.. இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடித்த சமீபத்தில் ரிலீசான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்தின் மூலம் கவிதைக்கும் சினிமாவில் ஒரு நல்ல அடையாளம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு உலகநாயகன் கமலஹாசன் நேரில் அழைத்து அவரை பாராட்டினார். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கவின் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

நடிகர் கவின் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்காக பல வருடங்களாக போராடி வருகிறார். ஆனால் இவர் முதன் முதலில் நடித்த ஹீரோவாக நடித்த நட்புனா என்னன்னு தெரியுமா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு உள்ளே கவின் ரொம்பவும் நொந்து போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

Also Read:டாடா கவினுக்கு வெற்றியா, தோல்வியா.? அனல் பறக்கும் பிரிவியூ ஷோ விமர்சனம்

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்னும் தொடரில் வேட்டையனாக நடித்த பிறகு கவினுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே ஆனது. அதற்கு முன்பே கவின் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். வேட்டையன் கேரக்டர் மூலம் தான் இவருக்கு ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் முதல் படம் ஜவ்வாய் இழுத்ததால் தமிழ் சினிமா ரசிகர்கள் கவின் என்று ஒரு நடிகர் இருப்பதையே மறந்து விட்டனர்.

கவினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைந்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கவின் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன் பின்னர் கவினுக்கு பல பட வாய்ப்புகள் அமைந்தன. இதில் டாடா திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளமாக மாறிவிட்டது. அதனைத் தொடர்ந்து கவின் நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது.

Also Read:கல்யாணம் ஆகாமலே அப்பாவான கவின்.. அனல் பறக்க வெளிவந்த டாடா பட திரைவிமர்சனம்

 

                                                           பூஜையுடன் தொடங்கிய கவினின் புதிய படம்

முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத் இந்த படத்தின் இசை அமைக்கிறார். மேலும் அயோத்தி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த ப்ரீத்தி அஸ்ரானி இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி விட்டது என கவின் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்திருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். சதீஷ் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மானாட மயிலாட மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பணிபுரிந்த இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:ஒரு நல்ல டர்னிங் பாயிண்டுக்காக காத்திருக்கும் 5 இளம் நடிகர்கள்.. ஜெய் பீம்மோட நிற்கும் மணிகண்டன்

Next Story

- Advertisement -