சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஜீவானந்தத்தின் பிளானை நோட்டமிடும் கௌதம்.. நாலா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், நான் தான் பெரிய ஆளு என்று கம்பீரமாக சுற்றிக் கொண்டிருந்த குணசேகரனின் ஆட்டம் ஒரேடியாக காலி ஆகிவிட்டது. எப்பொழுது ஆதிரை கல்யாணம் முடிந்ததோ, அப்பவே குணசேகரனுக்கு ஏழரை சனி பிடித்து விட்டது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பது போல் பெயருக்கு தான் மீசை,வெள்ளையும் சொள்ளையுமா சட்டை போட்டுக்கிட்டு அலஞ்சுட்டு இருக்கிறார்.

அடுத்தபடியாக ஆடிட்டர் சொன்ன மாதிரி மருமகளிடம் கையெழுத்து வாங்கிய குணசேகரனால் சக்தியிடம் வாங்க முடியாமல் போய்விட்டது. இந்த விஷயத்தில் ஜனனி சூதானமாக இருந்து குணசேகரனை மடக்கி விட்டார். அடுத்ததாக கௌதம் ஏதோ நம்மிடம் மறைக்கிறார் என்று கண்டுபிடித்து விடுகிறார் ஜீவானந்தம். பிறகு ஜீவானந்தம், கௌதமிடம் எப்படியாவது ஜனனிடம் நல்ல தோழராக பழகி இன்னும் இரண்டு நாட்களுக்குள் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

Also read: பாக்யாவை பழிவாங்க சவால் விடும் ராதிகா.. கோபிக்கு அசிங்கபடுவதே வேலையா போச்சு

இது ஏதோ ஜீவானந்தம் கௌதமிற்கு செக் வைப்பது போல் தெரிகிறது. ஏனென்றால் ஜீவானந்தத்திற்கு கௌதம் மேல் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. இனிமேல் என்னவென்று ஒவ்வொரு விஷயத்தையும் நோட்டமிட்டு பார்க்கப் போகிறார். ஒருவேளை இவர் ஜனனியின் தோழர் என்று தெரிந்திருக்கலாம். அதனால் தான் கௌதமிற்கு  இப்படி ஒரு பிளானை போட்டு கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் கௌதம் ஏன் ரெண்டு பக்கமும் தலையாட்டிக் கொண்டு மௌனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதில் இவர் யாருக்கு உண்மையாக இருக்கப் போகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அடுத்ததாக அப்பத்தாவின் சொத்தை முறைப்படி ரிஜிஸ்டர் பண்ண வேண்டும் என்று நினைக்கும் ஜீவானந்தத்தின் பிளானை நோட்டமிட்டு கௌதம், ஜனனிக்கு உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது.

Also read: வசமாய் சிக்கிய கண்ணன்.. ஐஸ்வர்யா கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டா, இது தேவைதான்

அப்படி இல்லை என்றால் இந்த விஷயத்தை ஜனனி சீக்கிரம் தெரிந்து கொண்டால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் ஜனனி அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்கினது குணசேகரன் தான் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். அடுத்ததாக கரிகாலனிடம் மரியாதை இல்லாமல் பேசின காரணத்திற்காக குணசேகரன் மகளை கூப்பிட்டு மன்னிப்பு கேட்க சொல்கிறார்.

ஆனால் அதெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவிடுகிறார். உடனே குணசேகரன், ஞானத்திடம் இதற்கு ஏன் நம்ம மீசையை வைத்துக்கொண்டு முறுக்கி தெரிஞ்சுகிட்டு அலைய வேண்டும் என்று நக்கல் அடிக்கிறார். ஆக மொத்தத்தில் குணசேகரனின் ஆட்டம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கை ஓங்கி விட்டது.

Also read: டிஆர்பியில் முந்த ‘எதிர்நீச்சல்’ குணசேகரனுக்கு விஜய் டிவி விரித்த வலை .. எந்த சீரியலுக்கு தெரியுமா?

- Advertisement -

Trending News