குசும்புக்கார கிழவனா இருக்காரே.. சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் குடும்பத்தினரிடம் கோபித்துக் கொண்டு, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அப்பாவுடன் சேர்ந்து இருக்கும் முடிவை இனியா எடுத்திருக்கிறார். எனவே தற்போது மகள் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார் என பாக்யா கலக்கத்தில் உள்ளார்.

இந்த சூழலில் பாக்கியலட்சுமியின் மாமனார் ராமமூர்த்தி இனியாயுடன் தங்குவதற்காக அவரும் கிளம்பிவிட்டார். அவரை ராதிகா வீட்டில் பார்த்ததும் இனியாவிற்கும் மன நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் இனியா, ராதிகா வீட்டில் இருப்பதற்கு கொஞ்சம் கூசுகிறார்.

Also Read: அடேய் கோபி, சதிலீலாவதி பாக்குற மாதிரி இருக்கு.. கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கடா

ஆனால் இனியாவை பார்த்துக் கொள்வதற்கு மட்டுமல்லாமல், ராதிகாவையும் வறுத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ராமமூர்த்தி அங்கு வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல பாக்யாவை கழட்டி விட்டு ராதிகாவை பிடித்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் கோபிக்கு உணர்த்த ராமமூர்த்தி முயற்சிக்கிறார்.

இதற்காக தரமான வேலைகளை தாத்தா, ராதிகா வீட்டில் செய்து கொண்டிருக்கிறார். அதில் முதல் கட்டமாக ராதிகா சமைத்த சமையலை கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக சாம்பாரை பார்த்து காரக்குழம்பு என்றும், சாதத்தை குக்கரில் அல்ல வடித்து தான் சாப்பிட வேண்டும் என்றும் ஓவர் குசும்பு பண்ணுகிறார்.

Also Read: விஜய் டிவியை ஒழித்துக்கட்ட சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 1000 எபிசோட் கடந்த இயக்குனருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

இதனால் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை படாத பாடுபடுத்தும் தாத்தாவின் கேரக்டர் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த சீரியலை பார்க்கும்போது வேதாளம் கதை தான் நியாபகத்துக்கு வருகிறது.

அத்துடன் இனிவரும் நாட்களில் பாக்கியலட்சுமி சீரியல் காமெடி மற்றும் கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்க போகிறது. அதுமட்டுமின்றி ராதிகாவின் சுயரூபத்தை தாத்தாவின் மூலம்தான் கோபி பார்க்கப் போகிறார்.

Also Read: டிஆர்பிக்காக நயன்தாராவை வம்பிழுக்கும் விஜய் டிவி.. இதே வேலையா தான் இருப்பாங்களோ!

Next Story

- Advertisement -