ஆள் பார்த்து இரண்டு முகம் காட்டும் யோகிபாபு.. அது வேற வாயி இது நாற வாயி

காமெடி நடிகர் யோகி பாபு இப்போது பிசியாக இருக்கும் நடிகர். அவர் கால்ஷீட் கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் மீது சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் மிகப்பெரிய குற்றசாட்டை வைத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ படத்தில் அறிமுகமானார் யோகி பாபு. அதன் பிறகு தில்லாலங்கடி, பையா, வேலாயுதம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் சுந்தர். சி யின் இயக்கத்தில் நடித்த ‘கலகலப்பு’ திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமானார்.

Also read:கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த யோகி பாபு.. விஷயத்தைக் கேட்டு அசந்து போன விஜய் சேதுபதி

ஆரம்ப நாட்களில் சிறு, சிறு கதாபாத்திரத்தில் நடித்த யோகி பாபு இப்போது பயங்கர பிஸியான காமெடியன் ஆகி விட்டார். இதற்கு காரணம் சந்தானம், வடிவேலுவின் வெற்றிடங்கள் என்று கூட சொல்லலாம். அஜித், விஜய், ரஜினி என உச்ச நட்சத்திரங்களோடு இணைந்து நடித்து விட்டார்.

யோகி பாபு பொதுவாக பெருசாக அலட்டிக் கொள்ள மாட்டார், தயாரிப்பாளர்களை தொந்தரவு செய்ய மாட்டார் என்ற கருத்து கோலிவுட்டில் நிலவுகிறது. ஆனால் யோகி பாபுவின் கதையே வேறு என சமீபத்தில் ஒரு இயக்குனர் கூறியிருக்கிறார்.

Also read:கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து

யோகி பாபு பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தில் தான் அமைதியாக இருப்பாராம். இதற்கு காரணம் பெரிய நடிகர்கள் படங்களில் தொந்தரவு செய்தால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காது என்று . ஆனால் சின்ன படங்களின் தயாரிப்பாளர்களிடம் இது வேண்டும், அது வேண்டும் என அதிகமாக தொந்தரவு செய்வாராம்.

யோகி பாபுவுக்கு இரண்டு முகம் இருப்பதாகவும் அதை தயாரிப்பாளர்களுக்கு ஏற்றவாறு அவர் மாற்றி கொள்கிறார் எனவும் அந்த இயக்குனர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

Also read: நக்கல் நடிகருடன் பட வாய்ப்பை தட்டி பறித்த யோகி பாபு.. சூரி மார்க்கெட்டை இழக்க இது தான் காரணம்

இப்போதைக்கு படம் முடியவில்லை என்பதால் எதுவும் முழுசாக கூற முடியாது என்றும், படப்பிடிப்பு முடிந்ததும் யோகி பாபு வின் உண்மை முகத்தை பற்றி கூறுவதாகவும் அந்த இயக்குனர் கூறியிருக்கிறார். யோகி இப்போது ‘மெடிக்கல் மிராக்கள்’, ‘பூமர் அங்கிள்’ படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.