சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கதையே கேட்காமல் கழுத்தில் துண்டை போடும் யோகி பாபு.. கேரியருக்கு வரும் பேராபத்து

தொடக்கத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு, அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து அவரின் நகைச்சுவை ரசிகர்களை மெல்லமெல்ல ஈர்த்ததால் இன்று முன்னணி காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி முன்னணி நடிகர்களுடன் இணைந்து பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் யோகிபாபு, ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதற்காக ஒரு தயாரிப்பாளர் சென்றுள்ளார்.

கதையை கேட்கவே இல்லையாம் 2 கோடி சம்பளமாக கேட்டாராம். அதுமட்டுமில்லாமல் வரும்போது ஒரு கோடி அட்வான்ஸ் கொண்டு வந்து விடுங்கள் எனக் கூறி, அந்தத் தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டாராம்.

இப்படி கதையையே கேட்காமல் தயாரிப்பாளரின் கழுத்தில் துண்டை போட்டிருக்கிறார் யோகிபாபு. படத்திற்கான கதையையே நான் சொல்லவில்லை. அதற்குள் இவ்வளவு கராராக பேசுகிறார் என்று அந்த தயாரிப்பாளர் இவரை வைத்து படம் பண்ணும் ஆசையை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

யோகி பாபுவின் இந்த தவறான அணுகுமுறை அவருடைய சினிமா கேரியரைகே பேராபத்தாய் முடிய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கும் சில நடிகர்கள் கதையை தேர்வு செய்வதில் தடுமாறி, கிடைத்த படங்களில் எல்லாம் நடித்து கேரியரை தொலைத்த கதைகள் எல்லாம் தமிழ் சினிமாவில் உண்டு.

அந்த நிலைமை யோகிபாபுவுக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் அடுத்தடுத்த படங்களில் கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் இல்லையென்றால் அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என அவரிடம் கதை சொல்லி தெறித்து ஓடிய  அந்தத் தயாரிப்பாளர் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

Trending News