நக்கல் நடிகருடன் பட வாய்ப்பை தட்டி பறித்த யோகி பாபு.. சூரி மார்க்கெட்டை இழக்க இது தான் காரணம்

யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். அதுமட்டுமன்றி பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் யோகிபாபு தான் காமெடி நடிகராக வலம் வருகிறார்.

தற்போது காமெடி நடிகர்களுக்கு தமிழ்சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் காமெடி நடிகர்கள் எல்லோரும் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்கள். வடிவேலு, சந்தானத்தை தொடர்ந்து தற்போது சூரியும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக சூரி நடிக்கும் விடுதலை படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்காக பல பட வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளார் சூரி. இந்நிலையில் சிவகார்த்திகேயன், சூரி காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே ஹிட் தான்.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வாய்ப்பு யோகிபாபுக்கு போயுள்ளது. அதாவது யோகிபாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை சரிதாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் மாவீரன் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் இயக்குனர் ஷங்கரும் கலந்து கொண்டார். இந்நிலையில் இப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சூரி நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று கூறுவதால் தற்போது அவரது படவாய்ப்புகள் யோகி பாபுவை வந்தடைகிறது. மேலும் சிவகார்த்திகேயன், யோகிபாபு கூட்டணியில் உருவாகும் காமெடியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Next Story

- Advertisement -