சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நான் உத்தமனா இல்லனாலும் மனைவி பத்தினியா இருக்கணும்.. இது எந்த விதத்தில் நியாயம் கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரிகள் காதலித்த ராதிகாவை கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு பாக்யாவை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காகவே ராதிகாவுடன் ஒரே தெருவில் கோபி வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

முதலில் பாக்யாவிற்கு எதிராக வில்லத்தனம் செய்யாமல் இருந்த ராதிகா ஏரியா கவுன்சிலர் எலக்ஷனில் கோபியின் தூண்டுதலால் பாக்யாவிற்கு எதிராக போட்டியிட்டு படு தோல்வியை சந்தித்தார். இதை தாங்கிக் கொள்ள முடியாத ராதிகா இப்போது பாக்யாவிற்கு எதிராக சதி திட்டம் தீட்டி பல வேலைகளை செய்கிறார்.

Also Read: பிக் பாஸ் சீசன் 6ல் பாப்புலரான 5 பிரபலங்கள்.. வாய் மட்டும் இல்லைனா உன்னையெல்லாம் நாய் கவ்விக்கிட்ட போயிடும்

அதிலும் பாக்யா கஷ்டப்பட்டு லோன் வாங்கி பெரிய ஆர்டரை பிடித்து வைத்திருந்த நிலையில் அந்த ஆர்டர் அவருக்கு கிடைக்காத படி ராதிகா செய்துவிட்டார். இதன்பின் திருமண மண்டபத்தில் இருக்கும் ஆர்டர் குறித்து ஏற்கனவே பாக்யாவிற்கு பழக்கமான அந்த கம்பெனியின் எம்டி இடம், வேறு ஏதாவது ஆர்டர் கிடைக்குமா என்பது குறித்து பேசுகிறார்.

ஆர்டர் கைவிட்டு போனதை நினைத்து கலங்கிய பாக்யாவிற்கு இனிவரும் நாட்களில் நிச்சயம் மண்டபத்தில் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும் என்றும் அவர் தேற்றுகிறார். அவர்கள் அமர்ந்து பேசும் அதே ஹோட்டலில் தான் கோபியும் இருக்கிறார். பாக்யாவை வேறொரு ஆணுடன் பார்த்த பிறகு கோபிக்கு பற்றி எரிகிறது. இந்த கோபம் தேவையில்லாத கோபமாக சின்னத்திரை ரசிகர்கள் பார்க்கின்றனர்.

Also Read: மனைவியின் தோழியவே 2-ம் திருமணம் செய்த மதுரை முத்து.. ஆனா அதுவும் கொடுத்து வைக்காத கொடுமை

ஏனென்றால் நீ மட்டும் உத்தமனா இருக்க மாட்ட, ஆனா உன்னை கட்டின பாவத்திற்காக விவாகரத்து ஆள பிறகும் எக்ஸ் மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கோபியின் கோபத்தை பார்த்து கொத்திக் குடிக்கின்றனர்.

இப்போது கோபிக்கு வந்த கோபம் தான், கோபி ராதிகாவுடன் இருந்தபோது பாக்யாவிற்கும் வந்திருக்கும் தானே! என்பதை அவர் துளி கூட யோசித்துப் பார்க்கவில்லை. அதற்கு மாறாக பாக்யாவை தப்பான கண்ணோட்டத்தில் கோபி பார்ப்பது சின்னத்திரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Also Read: பிக் பாஸ் வரலாற்றிலேயே 4 முறையும் கேப்டனான மார்க்கண்டேயன்.. சினேகன், யாஷிகா சாதனை முறியடிக்கப்பட்டது

- Advertisement -

Trending News