நீ எப்ப அரசியலுக்கு வருவ, அஜித்திடம் கேள்வி கேட்ட நடிகர்.. ஒரு பதிலால் வாயடைத்துப் போயிட்டேன்

Ajith Opinion about politics: அஜித்தை பொருத்தவரை படம் நடிப்பது காசு சம்பாதிப்பது மட்டுமே வேலையாக பார்த்து நடித்துக் கொண்டு வருகிறார். இதை அவரே பல இடங்களில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி உரைக்க சொல்லி இருக்கிறார். அதனால் தான் எனக்கு ரசிகர்கள் சங்கம் வேண்டாம் என்று எல்லாத்தையும் களைத்து ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டும் வந்து பாருங்கள் என்று வலியுறுத்திருக்கிறார்.

அத்துடன் எனக்கு எக்ஸ்ட்ரா பெயர்கள் எதுவும் தேவையில்லை என்று ரசிகர்கள் இவருக்கு ஆசை ஆசையாக வைத்த பட்டங்களை எல்லாத்தையும் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். இப்படி தனக்கு தோணுவதை மட்டும் செய்து கொண்டு வரும் அஜித், நீங்க என்னதான் சொன்னாலும் நாங்கள் உங்கள் பின்னாடியில் இருந்து உங்க படத்துக்கு ஏகபோக வரவேற்பை கொடுப்போம் என்று ரசிகர்கள் பலரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு வருகிறார்கள்.

அஜித் சொன்ன ஒத்த வார்த்தை

அதோடு விடாமல் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டு மோதும் அளவிற்கு ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள். இதனாலையே நீயா நானா என்று படங்களில் வெற்றியை பார்க்கும் அளவிற்கு ஒரு சூழ்நிலை அஜித் மற்றும் விஜய்க்கு அமைந்துவிட்டது. ரசிகர்களும் இவர்கள் போட்டி போட்டு நடித்தால் தான் ஒரு தரமான படத்தை கொடுப்பார்கள்.

அதன் மூலம் நமக்கும் மிகப்பெரிய சந்தோசம் கிடைக்கும் என்று அப்போது ரசிகர்கள் மோதி கொள்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வேண்டாம் நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று அஜித் விஜய் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள். இருந்தாலும் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் சண்டை சச்சரவுகள் மட்டும் குறைந்தபாடாக இல்லை. இப்படி ஒரு பக்கம் ரசிகர்கள் இருக்கும் நிலையில் விஜய் அவருடைய அரசியல் வருகை பற்றி கூறி இந்த போட்டியில் இருந்து விலகி விட்டார்.

அதாவது தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதன் பிறகு தளபதி 69 படத்தோட கடைசி படமாக முடித்துக் கொள்கிறேன் என்று விஜய் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு விட்டார். அந்த வகையில் இதற்கடுத்து அஜித்துடன் மோதும் அளவிற்கு விஜய் படங்கள் வராது என்று விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லை அஜித் ரசிகர்களும் கொஞ்சம் கவலையில் தான் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அஜித் இப்ப இல்லையென்றாலும் பின் காலத்தில் அரசியலுக்கு வருவாரா என்ற ஒரு சில கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை பிரபல நடிகருமான, அஜித் மற்றும் விஜய்யின் நண்பர் ரமேஷ் கண்ணா அஜித்திடம் நேரடியாக கேள்வி கேட்டிருக்கிறார். அதாவது விஜய் அரசியலுக்கு வந்து விட்டார், நீ எப்ப அரசியலுக்கு வரப் போகிறாய் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அஜித் அசால்டாக சிரித்துக்கொண்டு மூடிட்டு போ என்று நண்பர் என்கிற முறையில் பதில் கூறி ரமேஷ் அரவிந்தை வாய் அடைக்க வைத்திருக்கிறார். இதை சமீபத்தில் அளித்த பேட்டியில் ரமேஷ் அரவிந்த் கூறியிருக்கிறார். அதாவது அஜித்தை பொருத்தவரை அரசியல் என்பது குடிமகனாக ஓட்டு போடுவது மட்டும்தான் என்று நினைக்கிறார்.

மற்றபடி அரசியல் பற்றி அவருடைய மனதில் கொஞ்சம் கூட விருப்பமோ ஆர்வமோ இல்லை என்று தெரிந்து விட்டதாக ரமேஷ் அரவிந்த் கூறியிருக்கிறார். தற்போது இவர் கூறிய வீடியோ தான் இணையத்தில் வைரலாக வருகிறது.

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் படங்களின் அப்டேட்

Next Story

- Advertisement -